Breaking News

விபத்தில் இருந்து மீண்ட விக்டோரியா பிரிமியர் மீண்டும் பணிக்குத் திரும்பினார் : தன் கணவர் உயிருடன் மீண்டதே தனக்கு மகிழ்ச்சி என டேனியலின் மனைவி வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ

Victoria Premier returns from work after crash. Daniel's wife says she's happy her husband is alive

கடந்த மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி ஹாலிடே ஹவுஸில் ஏற்பட்ட விபத்தில் பிரீமியர் Daniel Andrews படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்தார். இந்த விபத்தில் அவருடைய நெஞ்சு எலும்புகள் மற்றும் முதுகு எலும்புகளில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து தற்காலிக ப்ரீமியராக James Merlino நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது மீண்டும் பிரிமியர் குணமடைந்து தன் பணிக்கு திரும்பி இருப்பதன் மூலம் தற்காலிக ப்ரிமீயரின் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன.

Victoria Premier returns from work after crash. Daniel's wife says she's happy her husband is alive.இந்நிலையில், விபத்து தொடர்பாகவும் அதிலிருந்து மீண்டு வந்தது தொடர்பாகவும் தன் மனைவி கேத்தரின் ஆண்ட்ரூஸ் உடன் இணைந்து நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ். Sorrento ஹாலிடே ஹவுசில் விபத்தின்போது டேனியல் உயிரிழந்துவிட்டதாக தான் அதிர்ச்சியுற்றதாக கேத்தரின் கூறியுள்ளார். மிகவும் கடினமான சில மாதங்களை தான் கடந்து வந்ததாகவும் அவர் உயிர் பிழைத்து திரும்பி வந்திருப்பது புதிய உலகத்திற்கு திரும்பி இருப்பதை போன்று இருப்பதாகவும் கேத்தரின் கூறியுள்ளார்.

இதனிடையே விக்டோரிய காவல்துறை, விக்டோரியா ஆம்புலன்ஸ், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் என அனைவருக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக டேனியல் மற்றும் கேத்தரின் கூறியுள்ளனர். மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்ட பிரீமியர் டேனியல் மீண்டும் உயிர் பிழைத்து வந்திருப்பது நமக்கெல்லாம் மிகப்பெரிய பேறு என்று ஆக்டிங் ப்ரீமியர் ஆக இருந்த மெர்லினோ தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3jnzwZM