Breaking News

ஆஸ்திரேலியாவில் விக்டோரியா எம்.பி மகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் : அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டதை விசாரணை வெளிக்கொணரும் என எம்.பி பேச்சு

விக்டோரியா எம்.பி Andy Meddick மகள் Kielan, மெல்போர்ன் வீதிகளில் தடுப்பூசிக்கு எதிராக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் மீது ஸ்ப்ரே பெயிண்ட்டை அடித்ததாகவும் இதனால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. Pandemic Bill – மசோதாவை எதிர்க்கட்சி எம்.பியான தான் ஆதரிப்பதாக அரசியல் காரணங்களுக்காக தன் மகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என்றும் எம்.பி Andy Meddick கூறியுள்ளார்.

விக்டோரியாவில் ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ரூஸ் பாராளுமன்றத்தில் கொண்டு வரும் Pandemic Bill கடுமையான விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது இதற்கு ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த மசோதாவை ஆதரிக்கும் Animal Justice கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Andy Meddick
சிக்கலுக்கு ஆளாகி உள்ளார்.

தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் வெறுப்புக் கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் அது தற்போது வன்முறையில் ஈடுபடும் அளவுக்கு சென்றிருப்பதாகவும் எம்.பி Andy Meddick கூறியுள்ளார். இது முழுக்க அரசியல் காரணங்களால் நடந்து வரும் சம்பவம் என்றும் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் தான் மசோதாவை ஆதரிப்பதை எதிர்த்தும் நடத்தப்படும் தாக்குதல் என்று எம்.பி Andy Meddick
தெரிவித்துள்ளார்.

அடிப்படையில் ஓவியராக உள்ள தன் மகள் Kilean கையில் வைத்திருந்த ஸ்பிரே பெயின்ட் மூலமாக தடுப்பூசிக்கு எதிராக எழுதப்பட்டிருந்த வாசகங்கள் மீது பெயிண்ட் அடித்ததாகவும் ஆனால், அங்கு வந்த நபர் ஒருவர் அவரிடம் ஆக்ரோஷமாக சத்தமிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும், கடுமையான அரசியல் கருத்துக்களை அவர் தெரிவித்து சென்றதாகவும் எம்.பி Andy Meddick கூறியுள்ளார். அச்சுறுத்தல் காரணமாக அங்கிருந்து வீதிகளில் இறங்கி நடக்கத் தொடங்கிய தனது மகளை பின்தொடர்ந்து வந்த அந்த நபர் தொடர்ந்து தவறாகப் பிரயோகம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விக்டோரியா போலீஸ் விசாரணை நடத்தி வருவதாகவும் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டால் இது அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தெரியவரும் என்றும் Andy Meddick தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், அரசியல் காரணங்களுக்காக ஒரு அப்பாவியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். இது நம் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும், இந்த விவகாரத்தில் ஒவ்வொரு ஆசிரியர்களுடனும் தான் துணை நிற்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.