Breaking News

தொடர் புகார்களை அடுத்து தொழிலாளர் கட்சியில் இருந்து விலகினார் விக்டோரியா எம்.பி Kaushaliya Vaghela : ப்ரீமியர் அலுவலகம் மீதான புகார்களை பணியிட பாதுகாப்பு அமைப்பு விசாரிக்கும் என தகவல்

Victoria MP Kaushaliya Vaghela quits Labor following a series of complaints

தொழிலாளர் கட்சியின் எம்.பி Kaushaliya Vaghela தனக்கு எதிரான பல்வேறு கொடுமைப்படுத்துதல் புகார்களை தெரிவித்திருந்த நிலையில் தொழிலாளர் கட்சியில் இருந்து திடீரென விலகி உள்ளார்.

முன்னதாக ப்ரீமியர் அலுவலகம் குறித்து தெரிவித்த புகார்கள் குறித்து எந்தவித நடடிவக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் Kaushaliya Vaghela பதிவு செய்திருந்தார்.

சிவப்பு சட்டை ஊழல் தொடர்பான IBAC விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் சொந்த எட்சி எம்பி.க்கு எதிரான வாக்களித்தது முதல் Kaushaliya Vaghela மீதான சர்ச்சைகள் அதிகரிக்கத் தொடங்கின.

அதே நேரத்தில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி வெறும் விளம்பர நோக்கத்திற்காக கண்முடித்தனமான குற்றச்சாட்டுக்களை எம்.பி Kaushaliya Vaghela தெரிவித்து வந்ததாக விக்டோரியா மாகாண ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ருஸ் தெரிவித்திருந்தார்.

2019ம் ஆண்டு முதல் தான் தெரிவித்து வரும் பணியிட பாதுகாப்பு புகார்கள் குறித்து எந்த வித விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும், ப்ரீமியர் அலுவலகம் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் Kaushaliya Vaghela குற்றம்சாட்டி உள்ளார்.

எம்.பி Kaushaliya Vaghela ஊடக நேர்காணல்கள், செய்திகள் மற்றும் அவர் சமுக வலைதளங்களில் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று பணியிட பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

சிவப்பு சட்டை ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள், IBAC விசாரணை தொடங்கி தொழிலாளர்கள் கட்சிக்குள் ஏற்பட்டு வரும் சலசலப்பு தற்போது எம்.பி Kaushaliya Vaghela கட்சியை விட்டு விலகும் நிலைக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக எந்த வித கருத்தையும் ப்ரீமியர் அலுவலகம் தெரிவிக்க மறுத்துள்ளது. மேலும், விசாரைணைக்கு பின்னரே கருத்துகளை தெரிவிக்க முடியும் என்றும் ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ருஸ் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3ITxKJI