Breaking News

தொடரும் பாதிப்பு எண்ணிக்கை- விழிபிதுங்கி நிற்கும் விக்டோரியா அரசு..!!

Victoria government on alert

விக்டோரியா மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பி.சி.ஆர் சோதனையைக் காட்டிலும் விரைவான ஆண்டிஜென் சோதனை முடிவுகளுக்கு மாகாண அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

Victoria government on alert.நேற்று வரை விக்டோரியா மாகாணத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 17,636-ஆக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 21,997-ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக விக்டோரியா மாநில அரசு ஆலோசித்து வருகிறது. மேலும் விரைவு ஆண்டிஜென் பரிசோதனை முலம் தொற்று பாதிப்புக்கு ஆளாகுபவர்கள், சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆன்லைன் வழியாகவும் அல்லது போன் மூலமாகவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது நோய் பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய அரசுக்கு வசதியாக இருக்கும்.

இதுதொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த விக்டோரியா மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் மார்டி ஃபாலி, கொரோனா வைரஸ் பரவுவது நிச்சயம் கவலையளிக்கக் கூடியது தான். ஆபத்தை உணர்ந்து இப்போதே தயாராவது தான் சாலச்சிறந்தது என்று தெரிவித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3HByNwM