Breaking News

விக்டோரியா மாகாணத்தில் இருந்து மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அம்மாநில முதல்வர் மார்க் மெக்கோவன் அறிவித்துள்ளார்.

Victoria Chief Minister Mark McCowan has announced various restrictions on people coming to Western Australia from the state

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்போர்ன் நகரத்தில் அண்மையில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இவர்களுக்கு எங்கிருந்து கொரோனா பரவியது என்பதை கண்டறிவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில் விக்டோரியா மாகாணத்தில் இருந்து செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு பிறகு வருபவர்கள் 48 மணி நேரத்திற்குள்ளாக கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்றும், அதுவரை அவர்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் நிலைமை மோசமடையும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் என்றும் அவர் மேற்கு ஆஸ்திரேலியாய் முதல்வர் மார்க் மெக்கோவன் தெரிவித்துள்ளார்.

Victoria Chief Minister Mark McCowan has announced various restrictions on people coming to Western Australia from the state.விக்டோரியாவில் இருந்து வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கொரோனா இல்லை என்று உறுதி செய்த பிறகே அவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விக்டோரியாவில் இருந்து கடந்த மே 15 முதல் மே 25 வரை சுமார் 18000 பேர் வருகை புரிந்திருப்பதாகவும், அவர்களில் யாரேனும் தொற்று பரவ வாய்ப்புள்ள இடங்களுக்கு சென்றிருந்தால் உரிய பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் மார்க் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு திரும்பியவர்கள் அறிகுறிகள் தென்படால் உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் மார் மெக்கோவன் வலியுறுத்தியுள்ளார்.

Link Source: https://ab.co/3hUbR2q