விக்டோரிய மக்களுக்காக டிசம்பர் 1 ஆம் தேதி முதல் Queensland எல்லை திறக்கப்படும் என்றும் Tasmania எல்லை நவம்பர் 27 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 1 ஆம் தேதி Queensland எல்லை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று Tasmania வில் விக்டோரியர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். Sydney டிசம்பர் 1 முதல் மக்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டதாக Premier Annastacia palaszczuk தெரிவித்தார்.
வரப்போகும் கிருஸ்துமஸ் விடுமுறை நாட்களில் NSW மற்றும் விக்டோரிய மாநில எல்லைகள் திறக்கப்படும். Gold Coast , Cairns மற்றும் Whitsunday போன்ற இடங்களில் மிகப்பெரிய வர்த்தகம் நடைப்பெறப்போவதாக தெரிவித்தார். மிகப்பெரிய வர்த்தகம் Queensland-க்கு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிருஸ்துமஸ் விடுமுறைக்கு ஏற்ற இடமாகவும் இவைகள் கருதப்படுகிறது.
இதற்கிடையில் ,நோய் தொற்று சோதனை செய்துள்ள Gladys Berejikilan தன்னை தனிமைப்படுத்தி கொள்ளவில்லை என்ற சர்ச்சையும் கிளம்பியது.கடந்த 26 நாட்களாக எந்தவித நோய் தொற்றும் விக்டோரியாவில் கண்டறியப்படவில்லை. மக்கள் விக்டோரியவில் தங்கி கிருஸ்துமஸ் காலங்களிலும் கோடையிலும் வணிகங்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு Premier Daniel Andrew தெரிவித்துள்ளார்.
தெற்கு ஆஸ்திரேலிய எல்லைகளில் எல்லாவித கட்டுப்பாடுகள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர் என்று Queensland சுகாதாரத்துறை உயர் அதிகாரி Jeannette Young கூறியுள்ளார். நோய் தொற்றுக்கள் தோன்றும் கால இடைவெளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
Tasmania எல்லைகள் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. வெள்ளிக்கிழமை அன்று முதல் எல்லை திறக்கப்பட உள்ளது. நவம்பர் 27 முதல் விக்டோரிய எல்லைக்குள் வருபவர்கள் தனிமை படுத்தப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா பயணிகள் அனைவரும் Tasmania-க்கு வரும் போது சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் மற்றும் எல்லா மாநிலங்கள் எல்லைகள் திறக்கப்படும் என்று Mr. Gutwein கூறினார்.