Breaking News

மைக்ரோசாப்ட் ஹேக் செய்யப்பட்ட விவகாரத்தில் சீனாவை குற்றம் சாட்டும் பல்வேறு உலக நாடுகள் : விளைவுகள் எங்கே முடியும் என்பது குறித்து நிபுணர்கள் கருத்து

Various world powers blame China for Microsoft hack case. Experts comment on where the consequences could be

மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் மென்பொருள்களை தீங்கிழைக்கும் வகையில் சைபர் தாக்குதல் மூலமாக ஹேக் செய்த விவகாரத்தில் சீனா மீது அமெரிக்கா குற்றம்சாட்டிய நிலையில் பல்வேறு நாடுகள் தொடர்ந்து அமெரிக்காவுடன் ஒன்றிணைந்து உள்ளன. அந்த வரிசையில் சர்வதேச சமூகத்துடன் சீனாவுக்கு எதிரான புகாரில் ஆஸ்திரேலியா கைகோர்த்துள்ளது.

Various world powers blame China for Microsoft hack case2021 ஜனவரி மாதத்தில் நடைபெற்ற இந்த சைபர் தாக்குதலில் பல ஆயிரம் கணிணிகள் ஹேக் செய்யப்பட்ட நிலையல், சீனாவை சேர்ந்தவர்களை அமெரிக்கா குற்றம்சாட்டிய நிலையில் இந்த புகாரை மிகவும் கண்டிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா கூறியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் போன்ற பெரிய நாடுகள் கைகோர்த்துள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டின் பின்விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாக நிபுணர்கள் பல்வேறு விஷயங்களை விளக்கியுள்ளனர். இதேபோன்று சீனாவுக்கு எதிரான குற்றச் சாட்டில் ஐரோப்பிய யூனியனும் ஒன்று சேர்ந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ்சேஞ்ச் கணினிகள் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நேரடியாக சீனாவை குற்றம்சாட்டும் மேற்கண்ட நாடுகள் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அதை விடுத்து நேரடியாக குற்றம் சாட்டுவது தவறான அணுகுமுறை என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பொறுப்பற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது என்று ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது. தங்களது உறுப்பு நாடுகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

சைபர் தாக்குதல் விவகாரம் தொடர்பாக அதில் உள்ள கூறுகளை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாக சீன அரசை குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. புகார் அளிப்பவர்களை ஒன்றிணைப்பதை தாண்டி அதில் உள்ள உண்மைத் தன்மையை பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Various world powers blame China for Microsoft hack caseமைக்ரோசாப்ட் ஹேக் விவகாரத்தில் ஒரே மனநிலையில் தற்போது சீனாவுக்கு எதிராக ஒன்று திரண்டு உள்ள நாடுகள் அனைத்தும் சீன அரசை குற்றம்சாட்டும் நிலையில், குறிப்பிட்ட சில குழுக்கள் அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் இதுதொடர்பாக அமைப்பாகத் திரண்டு சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் சீனாவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தும் இதுபோன்ற சைபர் தாக்குதல் நடவடிக்கைகளை அந்நாடு ஊக்குவிக்கக் கூடாது என்றும் நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Link Source: https://ab.co/3eH2EI6