Breaking News

சமூக பங்களிப்பு மூலம் கூடுதல் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு உதவிடவும், அடைக்களம் தரவும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன

Various organizations have called for additional Afghan refugees to be assisted and sheltered through community participation

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் நாட்டில் இருந்து வெளியேறி, அமெரிக்க, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் சுமார் 3500 ஆப்கான் மக்களுக்கு அடைக்கலம் தர தயாராக இருப்பதாக, பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

Various organizations have called for additional Afghan refugees to be assisted and sheltered through community participation,.இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள Raechel Oleszek, ஆப்கானில் நடைபெறும் நிகழ்வுகள் மிகவும் துரதிஷ்டவசமானது என்றும், விமானங்களில் ஏறுவதற்கு முயற்சிக்கும் மக்களை பார்க்கும் போதும், கடும் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலக நாடுகளிடம் மக்கள் உதவியை எதிர் நோக்கியிருப்பதையே இந்த காட்சிகள் உணர்த்துவதாக Raechel Oleszek கூறியுள்ளார்.

நல்வாய்ப்பாக, ஆஸ்திரேலியா போன்ற வளமான, அமைதி நிறைந்த நாட்டில் பிறக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை என்றும், ஆனால் இது போன்ற இக்கட்டான நிலையில் சிக்கியிருக்கும் ஆப்கானிஸ்தானியர்களை கூடுதல் எண்ணிக்கையில் அரவணைக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக பல்வேறு சமூக குழுக்கள் ஒன்றிணைந்து, நிதி பங்களிப்புடன் ஒரு அமைப்பை தொடங்கி, ஆப்கான் அகதிகளுக்கு உதவ தயாராக உள்ளதாக அகதிகளுக்கான அமைப்பின் நிர்வாகி லிசா பட்டன் தெரிவித்துள்ளார்.

Various organizations have called for additional Afghan refugees to be assisted and sheltered through community participation.கனடாவில் கடந்த 40 ஆண்டுகளாக சமூக பங்களிப்புடன் அகதிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும், இந்த உதவியின் காரணமாக சுமார் 3,25,000 அகதிகள் தற்போது கனடாவில் மீள் குடியமர்த்தப்பட்டதாகவும் லிசா பட்டன் தெரிவித்துள்ளார். 5க்கும் மேற்பட்ட நபர்களோ, அல்லத் பல்வேறு சமூக குழுக்களோ ஒன்றிணைந்தோ, அகதிகள் மறுவாழ்வுக்கு உதவ முடியும். இத்திட்டத்தில் அகதிகளுக்கு தேவையான பொருளாதார உதவிகள், குழந்தைகளுக்கான கல்விச் செலவுகள், மறு வாழ்வுக்கான அனைத்து பொருளாதார உதவிகளும் இந்த சமூக பங்களிப்பு மூலமே கிடைக்கும்.

இதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் Alex Hawke க்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டதாகவும், அரசு விரைவில் நல்ல முடியை தெரிவிக்கும் என்று நம்புவதாகவும் லிசா பட்டன் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3BgPM4b