Breaking News

ஆஸ்திரேலியாவின் வட பிரதேசங்களில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் : பைசர் தடுப்பசி போதுமான அளவு கையிருப்பு உள்ளதாக தகவல்

Vaccination program for boys between the ages of 12 and 15 in northern Australia. Fischer vaccine in sufficient stock

Greater Darwin -ல் தகுதி வாய்ந்த குழந்தைகள் தொடர்பான கோரிக்கைகள் எழுந்த நிலையில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் பைசர் தடுப்பூசி செலுத்தலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Vaccination program for boys between the ages of 12 and 15 in northern Australia, Fischer vaccine in sufficient stockசிறுவர்களுக்கு தடுப்பூசியின் தேவையைப் பொறுத்து அதனை செலுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு முறையாக மேற்கொண்டு வருவதாகவும் தேவைப்படும் பட்சத்தில் பள்ளிகளிலேயே சென்று தடுப்பூசி போடுவதற்கு தயாராக இருப்பதாகவும் வடக்கு பிரதேச சுகாதார துறை அமைச்சர் Natasha Fyles கூறியுள்ளார். டெல்டா வகை வைரஸின் தீவிர தன்மையை உணர்ந்து இருப்பதால் அதிலிருந்து சிறுவர்களையும் பள்ளி செல்லும் மாணவர்களை மீட்க வேண்டும் என்பதில் கவனமுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலவசமாக வழங்கப்படும் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு அனைவரும் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் வடக்கு பிரதேச மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

வடக்கு பிரதேசத்தின் ஊரகப் பகுதிகளில் விரைவில் நெருங்க முடியாத இடத்தில் இருப்பவர்களுக்கும் கூட தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. தகுதி வாய்ந்த 12 முதல் 15 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vaccination program for boys between the ages of 12 and 15 in northern Australia,. Fischer vaccine in sufficient stockபெரும்பாலான மாகாணங்களில் சிறுவர்கள் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடக்கு பிரதேச முதலமைச்சர் Michael Gunner கூறியுள்ளார். வடக்குப் பிரதேசத்தில் பாதிக்கப்படக் கூடிய அளவில் இருக்கும் மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்துவதும் தேசிய அளவில் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துவது மே முக்கிய நோக்கம் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இதுவரை வடக்குப் பிரதேசத்தில் ஒரு லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பதாகவும் தற்போது சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த இருப்பதால் விரைவில் தொற்று பாதிப்பிலிருந்து மீளக் கூடிய பகுதியாக வடக்குப் பிரதேசம் இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/37VH8vA