ஆஸ்திரேலியாவில் கொரொனா தடுப்பூசி போடும் நடவடிக்கை 80 சதவீதத்திற்கும் அதிகமாக சென்றுள்ள நிலையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக ஆஸ்திரேலியா கொண்டாடி வருகிறது. 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கையை படிப்படியாக தீவிரப்படுத்தி வந்த ஆஸ்திரேலிய அரசு, நவம்பர் மாதத்தை இலக்காக நிர்ணயித்து இருந்தது.
பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், மக்கள் படிப்படியாக தளர்வுகளை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் மாற்றுத்திறனாளி சமூகத்தினர் பெருமளவு தடுப்பூசி போடாத பிரிவினராக இருப்பதால் அவர்கள் அபாயத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக Torres Strait தீவு மற்றும் அங்குள்ள மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து நோய் தொற்று பாதிக்கும் அபாயத்தில் இருப்பதாக தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பீட்டு திட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. நவம்பர் 5ம் தேதி கணக்கின் படி 79.6 சவதவிதம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 70.4 சதவீம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். இது மத்திய சுகாதாரத்துறையின் புள்ளிவிவர அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பாதிப்புக்குள்ளாகும் பட்டியலில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளின் முழுமையான புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றும், தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான காப்பீட்டு ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் முழுமையானதாக இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக நாம் கொண்டாட்ட மனநிலையில் இருப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடுவதாக ஆஸ்திரேலிய மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் Samantha Connor கூறியுள்ளார். Muscular Dystrophy – யால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் சிக்கல் நிலவுவதாகவும், மாற்றுத்திறனாளி சமூகத்தினருக்கான தடுப்பூசி விநியோகத்திலும் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதாகவும் Samantha Connor தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் முக்கியமாக தவிர்க்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் Samanatha Connor கேட்டுக் கொண்டுள்ளார். அதே நேரத்தில் மாற்றுத்திறனாளி மக்களோடு வசித்து வருபவர் களுக்கு மூன்றாவது தவணை பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக சூழல் உருவாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பாதிப்புக்கு உள்ளாகும் பட்டியலில் இருக்கும் பெரும்பாலானவர்கள், குறிப்பாக புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களும் கூட எந்தவித சமரசமும் இல்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலிய நோய் எதிர்ப்பு தொழில்நுட்ப அமைப்பான ATAGI தெரிவித்திருந்தது.
தொடர் சிகிச்சைகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி தயாராக இருப்பதாகவும் அதனை தகுதியானவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ளலாம் என்றும் ATAGI கூறியுள்ளது.
Link Source: https://bit.ly/3of15p0