Breaking News

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ள குவாட் உச்சி மாநாடு : ஆஸ்திரேலியாவுடன் பருவ நிலை மாற்றம் குறித்து பேச்சு நடத்த உள்ளதாக அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

வரும் 24ஆம் தேதி அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் குவாட் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளாக உள்ள ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம், தீவிரவாத தடுப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான ஐப்பிசிசி அறிக்கை வெளியாகி உள்ள நிலையில் அது தொடர்பான விவாதமே முக்கிய பொருளாக இருக்கும் என்றும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் Jen Psaki கூறியுள்ளார்.

US White House Quad Summit.. President Joe Biden announced talks with Australia on climate changeஅமெரிக்காவின் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடுகையில் 26 முதல் 28 சதவீதம் வரை வாயு வெளியேற்றத்தை குறைக்க அந்நாடு திட்டமிட்டுள்ளது. பருவ நிலை மாற்றம் குறித்த சவால்களை எதிர்கொள்ள இன்னும் அதிக இலக்குடன் முன்னோக்கி நகர வேண்டும் என்று அமெரிக்கா தரப்பில் ஆஸ்திரேலியாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் 3 மாகாணங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் அதிக அளவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். கலிபோர்னியா உள்ளிட்ட மாகாணங்களில் அதிக வெப்பம் காரணமாக காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளதாக சில ஆண்டுகளாகவே ஆராய்ச்சியாளர்கள் நம்மை எச்சரித்து வருவதாகவும், நாம் உரிய முறையில் விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

புவி வெப்பமயமாதல் குறித்த எச்சரிக்கை அறிவிப்புகளை நாம் சிறிதாக எண்ணினால் பெரிய அளவிலான இயற்கை பேரிடர்களை சந்திக்க நேரிடும் என்றும், அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்திலேயே நாம் பருவநிலை மாற்றம் இயற்கை சீற்றங்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளமுடியும் என்றும் அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

கலிபோர்னியாவின் கால்டோர் தீயில் 2 லட்சத்து 19 ஆயிரம் மரங்கள் மற்றும் ஆயிரம் வீடுகள் தீயில் எரிந்து சேதமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீயினால் ஏற்பட்ட பாதிப்புகளை அதிபர் ஜோ பைடன் ஹெலிகாப்டர் மூலமாக சென்று பார்வையிட்டார்.

இதனை எடுத்து குவாட் உச்சி மாநாட்டில் பருவநிலை மாற்றமே முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Link Source: https://bit.ly/3EmduhO