Breaking News

ஆக்கஸ் திட்டத்தின் நீட்சியாக ஆஸ்திரேலியாவில் ஆயுதங்களை குவிக்கும் அமெரிக்கா : ராணுவத் துருப்புகள், விமானங்கள் ஆஸ்திரேலியா வந்தடைந்தது

ஆஸ்திரேலிய கடற்படைக்கு 12 நீர்மூழ்கி கப்பலை உருவாக்குவதற்காக பிரான் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றது. இது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தளவாட ஒப்பந்தம் ஆக இருந்தது. இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியாவின் கூட்டு திட்டத்தின் அடிப்படையில் தற்போது ஆஸ்திரேலியாவில் கூடுதலாக ராணுவ துருப்புக்கள் விமானங்கள் உள்ளிட்டவை அங்கு குவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இரு நாட்டு ராணுவ தரப்பிலிருந்தும் பரஸ்பரம் படை பரிமாற்றம் இருக்கும் என்றும், மேம்படுத்துவதற்கான திட்டப்பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று ஆஸலதிரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் Peter Dutton கூறியுள்ளார்.

இந்தச் சூழலில்தான் தற்போது அமெரிக்காவில் இருந்து போர் விமானங்கள், குண்டு மழை பொழியும் விமானங்கள் மற்றும் அதற்கான தொழில்நுட்ப பணியாளர்கள் ராணுவ படை என ஒட்டு மொத்தமாக ஆஸ்திரேலியாவில் குவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த 18 மாதங்களில் ஆக்கஸ் தனது பணிகளை முழுவீச்சில் தொடங்கும் என்றும் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் சீனாவை எதிர்கொள்வதற்கான அனைத்து திட்டங்களும் செயல்வடிவம் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

US to stockpile weapons in Australia as an extension of the AUKUS program Army troops, planes arrive in Australia.சீனாவிற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஆஸ்திரேலியா தன்னை இணைத்துக் கொள்ளும் நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் அமெரிக்கப் படைகளை தனது மண்ணில் நிலை நிறுத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவிற்கு பதிலடி கொடுப்பதற்கு இது ஒன்றே சரியான வழி என்றும் ஆஸ்திரேலியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. AUKUS ஒப்பந்தம் குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்ன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் ஆகியோர் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங்கை புதன்கிழமை அழைத்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெய்ஜிங்கில், சீன வெளியுறவு அமைச்சகம் முத்தரப்பு ராணுவ கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளது. இது பிராந்திய ஸ்திரத்தன்மையை மோசமாக பாதிக்கும்;. ஆயுதப் போட்டியை மோசமாக்கும் மற்றும் சர்வதேச பரவல் தடுப்பு முயற்சிகளை பாதிக்கும் இந்த ஒப்பந்தத்தை சீனா உன்னிப்பாக கண்காணிக்கும் என்று கூறியுள்ளது.

நியூயார்க்கில் அடுத்த வாரம் நடைபெற உள்ள குவாட் உச்சிமாநாட்டில் இந்த விவகாரம் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்றும், ராணுவ கூட்டு நடவடிக்கை தொடர்பான சில முக்கிய நடவடிக்கைகள், அப்போது இரு நாடுகளுடன் இணைந்து மேற்கொள்வதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

Link Source: shorturl.at/yBNUV