Breaking News

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – சீன அதிபர் ஷீ ஜின்பிங் தொலைபேசி வழியாக பேச்சுவார்த்தை : 7 மாதங்களுக்கு பிறகு பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

தேசிய பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், அணு ஆயுதம், சைபர் குற்றத்தடுப்பு, பெய்ஜிங், பொருளாதார தடை, தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசி வழியாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் மத்தியில் இருக்கும் போட்டி சண்டையாக மாறிவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்கு இரு நாடுகளுக்கும் உள்ள பொறுப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

US President Joe Biden - Chinese President Xi Jinping over the phone, Consultation on various issues after 7 monthsஜோ பைடன் பதவியேற்ற பிறகு ஷி ஜின்பிங் – பைடன் ஆகியோர் இரண்டாவது முறையாக பேசிக் கொள்கிறார்கள். உளவு, வர்த்தகம் மற்றும் கொரோனா பெருந்தொற்று உருவான விதம் ஆகிய காரணங்களால் சீனா – அமெரிக்கா உறவு மோசமான நிலையில் உள்ளது. சீன அரசு ஊடகமான சிசிடிவி, “இந்த தொலைபேசி அழைப்பு எதேச்சையானது என்றும், ஆழமானது என்றும் தெரிவித்துள்ளது. விரிவான கேந்திர பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் இருதரப்பு சார்ந்த பல விஷயங்களை பேசியதாகவும்” தெரிவித்துள்ளது.

சீனா – அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நல்ல உறவை பேண முடியுமா என்பது உலகின் எதிர்காலத்திற்கும் முக்கியமானது என அதிபர் ஷி தெரிவித்ததாக சிசிடிவி தெரிவித்துள்ளது.

அதிபர் பைடனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தொலைப்பேசி அழைப்பு வந்ததாகவும், தனது நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பாத சீனாவின் கீழ்நிலை அதிகாரிகள் மீது கோபமடைந்திருந்தார் பைடன் என்றும் மூத்த வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

US President Joe Biden - Chinese President Xi Jinping over the phone,. Consultation on various issues after 7 monthsஇந்த ஆண்டு தொடக்கத்தில் பைடன் நிர்வாகம் மற்றும் சீனாவுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை பதற்றமான சூழலில் நிறைவடைந்தது. இருதரப்பு அதிகாரிகளும் பரஸ்பரம் கண்டனங்களை பகிர்ந்து கொண்டனர். பிற நாடுகள் சீனா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தூண்டுவதாக சீன அதிகாரிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர். சீனா பிற நாடுகளின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.

மேற்கண்ட விவகாரங்களில் நேரடியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருநாடுகளும் அணுக முடிவு செய்திருப்பதாக வெள்ளை மாளிகை வெள்ளை மாளிகை தெரிவிக்கிறது.

Link Source: https://ab.co/3z8HFp7