Breaking News

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும்-ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

US President Joe Biden and Australian Prime Minister Scott Morrison have reportedly held consultations on the Afghanistan issue.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அமைதிப் பணியில் ஈடுபட்டிருந்த இருந்து வெளி நாட்டு படைகள் முழுமையாக வெளியேறிய பிறகு இரு நாட்டு தலைவர்களும் முதல் முறையாக தொலைப்பேசி வழியாக இந்த ஆலோசனை மேற்கொண்டனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், மீட்பு நடவடிக்கையின் போது, தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த 13 அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்ததாகவும், இந்த உரையாடல் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.

US President Joe Biden and Australian Prime Minister Scott Morrison have reportedly held consultations on the Afghanistan issue 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இரு நாடுகளும் மேற்கொண்ட மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளையும், தியாகங்களையும் நினைவு கூர்ந்ததாகவும் இரு நாடுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் குவாட் ராணுவ பயிற்சி குறித்து அடுத்த மாதம் நடைப்பெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றம் குறித்த அறிவிப்பை ஜோ படன் வெளியிட்ட போது, ஆஸ்திரேலியாவுடன் ஆலோசிக்க வில்லை. இந்த முடிவு ஆஸ்திரேலியாவுக்கு அதிருப்தியளித்ததாக கருதப்பட்ட நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை செயலாளர் ஜென் சகி, ஆஸ்திரேலியாவுடனான தங்கள் நட்பு என்றும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

US President Joe Biden and Australian Prime Minister Scott Morrison have reportedly held consultations on the Afghanistan issue.,.தன்னுடைய முக நூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியவுடனான தங்கள் நட்பு ஸ்திரத்தன்மை வாய்ந்தது என்றும், இருவரும் ஒரே நோக்கத்திற்காக பயணப்படக்கூடியவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் போரின் போது உயிரிழந்த 41 ஆஸ்திரேலிய படைவீரர்களின் உயிர் தியாகம் வீனானதாக செய்தி வெளியிட்ட தாலிபான்களின் கருத்துக்கு பதிலளித்துள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை செயலாளர், சென் சகி, தாலிபான்களின் கருத்து அருவருக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். மேலும் 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற நீண்ட போரில் தங்களோடு துணை நின்ற நட்பு நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நன்றி தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/38ETpop