Breaking News

ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஆராய்ச்சியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட திட்டம் : ஆக்கஸ் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் முடிவு

ஆக்கஸ் கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பு பலப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தொடர்பான ஆராய்ச்சியில் மூன்று நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆஸ்திரேலியா தனது ராயல் ஆஸ்திரேலியா ராணுவத்திற்கு வாங்குவதாக இருந்த அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்கள் தொடர்பான தயாரிப்பிலும் கவனம் செலுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஆக்கஸ் கூட்டமைப்பின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உருவாக்க ஏற்கனவே கூட்டுத் திட்டத்தைக் கொண்டுள்ளன. ஆனாலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையிலேயே புதிய முயற்சியின் கவனம் இருக்கும் என்று பிரிட்டன் கூறியுள்ளது.

US, Australia, UK plan to work together on hypersonic missile research. Decision to expand nuclear-armed submarine program as part of the ACCAS agreement.தற்போதைய கூட்டு முயற்சி என்பது, யுக்ரேனில் ரஷ்யா ஹைப்பர்சோனிக் ஆயுதங்களைப் பயன்படுத்துவதுடன் தொடர்புடையது அல்ல. ஆனால் பிற நாடுகள் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் முதலீடு செய்வதால், அவற்றிடம் இருந்து தற்காப்பது எப்படி என்று கண்காணிக்க வேண்டி இருப்பதாக பிரிட்டன் கூறியிருக்கிறது. மார்ச் 19 அன்று, மேற்கு உக்ரைனில் உள்ள ஆயுதக் கிடங்கை அழிக்க ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தியதாக ரஷ்யா கூறியது. மேலும் அமெரிக்க ராணுவத்தின் உளவுத்துறை ரஷ்யப் படைகள் மீண்டும் மீண்டும் அவற்றைப் பயன்படுத்தியதாகக் கூறியிருக்கிறது.

போர் ஒன்றில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

நவீன ராணுவ தொழில்நுட்பம், சைபர் தொழில்நுட்பப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவும் பிரிட்டனும் ஏற்கனவே இணைந்து செயல்பட தொடங்கிவிட்ட நிலையில் தற்போது ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஆராய்ச்சியிலும் மூன்று நாடுகளும் இணைந்து செயல்படுவது ரஷ்யா மற்றும் சீனாவிற்கு முக்கிய சமிக்ஞையாக அமைந்துள்ளது.

தொலை தூர இலக்குகளை சென்று அழிக்கும் அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை களை சீனா ரஷ்யா ஆகிய நாடுகள் தொடர்ந்து பரிசோதனை முறையில் ஏவி வருவதாகவும் இதுதொடர்பான நடவடிக்கைகளை ஆக்கஸ் கூட்டமைப்பு நாடுகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ராயல் ஆஸ்திரேலிய ராணுவத்திற்காக வாங்குவதற்காக போடப்பட்டிருந்த அணுஆயுத நீர்மூழ்கி கப்பல்கள் ஒப்பந்தம் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் அதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் உதவி கூறப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3jjycpA