Breaking News

தாஸ்மானியாவில் வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும் இடி, மழை : காரணத்தை அறிவியல்பூர்வமாக விளக்கும் நிபுணர்கள்

Unusual increase in thunder and rain in Tasmania. Experts explain the cause scientifically

மிக அதிக வெப்பம் நிறைந்த நாட்களில் வரும் கோடை மழை மற்றும் குளிர்காலத்தில் பெய்யும் மழையும் அதிக இடியுடன் கூடிய மழையாக தாஸ்மானியர்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த மாறுபட்ட வானிலைக்கு காரணம் என்ன என்பது முக்கிய கேள்வியாக எழுந்தது. மின்னல், இடியுடன் கடும் புயலாக மாற தாஸ்மானியாவின் புவியியல் அமைப்பு காரணமா என்பதும் ஆய்வுக்கு உள்ளானது.

Unusual increase in thunder and rain in Tasmania, Experts explain the cause scientifically இந்நிலையில், காற்றழுத்ததின் போது நீர்துளிகளாக மாறும் மேகக் கூட்டங்கள் தீவிரமடையும் போது கடும் இடி, மின்னல், மழையாக மாறுகின்றன. தாஸ்மானியாவில் மின்னல் தாக்கியதை காட்டும் 2019ம் ஆண்டின் வரைபடம் ஒரு புயல் நூற்றுக்கணக்கான மின்னல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு சான்றாக உள்ளது.
புயல் உருவாததை மூன்று காரணிகள் தீர்மானிக்கின்றன.
1. தரைக்கு அருகில் உள்ள காற்றில் போதுமான ஈரப்பதம்
2. அந்த ஈரப்பதம் மேகத்திற்குள் உயரும் போது போதுமான மிதவை அளவு இருத்தல் வேண்டும்.
3. காற்றில் ஈரப்பதம் என்பது புயலின் தன்மையை தீர்மானிக்கவும், மழை ஆலங்கட்டி மழையை உருவாக்கும் எரிபொருளாக பார்க்கப்படுகிறது. பெரிய இடி, மின்னல் கூட்டம் என்பது ஒரு பில்லியன் டன் தண்ணீர் மற்றும் பனியை வைத்திருக்கும்.
ஆனால், தாஸ்மானியாவை பொறுத்தவரை இங்கு ஏற்படும் இடி, மின்னல் மழை உள்ளிட்ட புயல் பாதிப்புகள் அனைத்தும் சக்தி வாய்ந்தவையாக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மின்னல் ஒளி ஒரு நகரையே வெளிச்சமாக காட்டும் அளவுக்கு சக்தி வாய்ந்தது என்றும், அதன் தாக்குதல் மக்கள் வாழிடங்களில் ஏற்பட்டால் அதன் பாதிப்பு மோசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதே போன்று மழையின் அளவு மற்றும் வெப்பநிலை என்பது இயல்புக்கு முற்றிலும் மாறாக உள்ளது என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1992 முதல் இது போன்ற மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த சில ஆண்டுகளில் மிக அதிக அளவில் தாஸ்மானியர்கள் இதுபோன்ற சமநிலையற்ற வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. 2007, 2009, 2019 போன்ற ஆண்டுகளில் 13 மணி நேர தொடர் இடி, மின்னல், மழை போன்ற பாதிப்புகளை தாஸ்மானியா சந்தித்ததாகவும் வானிலை ஆய்வாளர் Michael Conway கூறியுள்ளார்.