Breaking News

சாலமன் தீவுகளில் வன்முறை காரணமாக நிலவும் அமைதியற்ற சூழல் : நிலையைமையை கட்டுக்குள் கொண்டுவர ஆஸ்திரேலிய உதவியை நாடுகிறது சாலமன் தீவு

தென் பசுபிக் பெருங்கடலில் நூற்றுக்கணக்கான தீவுகளை கொண்ட நாடு சாலமன் தீவுகள். இங்கு பிரதமருக்கு எதிராக நடைபெற்று போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்துள்ளது. நாடாளுமன்ற கட்டடத்திற்கு தீ வைத்து நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக தலைநகர் ஹொனியராபகுதியில் அமைதியற்ற நிலை நிலவுகிறது. சீனா ஆதரவு நிலையை கைவிட வலியுறுத்தி சாலமன் தீவில் பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் வன்முறையாக மாறி வருவதால் பெறும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Unrest in the Solomon Islands due to violence. Solomon Islands seeks Australian assistance to bring the situation under control,இந்த நாட்டின் பிரதமர் Manasseh Sogavare, சமீபத்தில் தாய்வான் நாட்டுடனான தூதரக உறவுகளை துண்டித்துவிட்டு, சீனா உடன் தூதரக உறவுகளை ஏற்படுத்தினார். இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சீனா பக்கம் சாயும் சாலமன் தீவு அரசின் முடிவை பெரும்பாலான மாகாணங்களுக்கும் ஏற்க மறுத்தன. இதையடுத்து பிரதமர் Manasseh Sogavare பதவி விலக வலியுறுத்தி சாலமன் தீவுகளின் தலைநகரமான ஹொனியராவில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

சைனா டவுன் பகுதியில் உள்ள சீன நாட்டினருக்கு சொந்தமான கடைகள், நிறுவனங்கள் கொளுத்தப்பட்டன. சாலமன் தீவுகளின் நாடாளுமன்ற கட்டிடத்திற்கும் தீ வைக்கப்பட்டதால் நாடு முழுவதும் பெறும் பதற்றம் நிலவுகிறது. சாலமன் தீவுகளில் உள்ள சீன நாட்டினர் தாக்கப்படுவதற்கும், அவர்கள் உடைமைகள் எரிக்கப்படுவதற்கும் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சாலமன் தீவுகள் அரசுடன் ஒன்றிணைந்து குழப்ப நிலைக்கு தீர்வு காணப்படும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.

Unrest in the Solomon Islands due to violence. Solomon Islands seeks Australian assistance to bring the situation under control.இந்நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலையை கட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு காவல்துறையுடன் இணைந்து ஆஸ்திரேலிய காவல்துறை களத்தில் இறங்கி உள்ளது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் உதவி தற்போது உடனடியாக தேவைப்படுவதாக சாலமன் தீவுகளின் பிரதமர் Manasseh Sogavare கூறியுள்ளார். இதனையடுத்து ஆஸ்திரேலிய படைகள் சாலமன் தீவுகளுக்க அனுப்பப்பட்டுள்ளன. அங்கு போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Link Source: https://ab.co/31c7UQz