Breaking News

ஆஸ்திரேலியாவிற்கு அணு சக்தி நீர்மூழ்கி கப்பல் தொழில் நுட்பத்தை வழங்க அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

United States and Britain have agreed to provide Australia with nuclear submarine technology.

அமெரிக்க அதிபர், ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரிடையே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் இறுதியாக அன்சூஸ் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக அக்கூஸ் கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

United States and Britain have agreed to provide Australia with nuclear submarine technology
பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரனமான சூழ்நிலையை சமாளிக்க இந்த கூட்டணி முக்கிய பங்காற்றும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அக்கூஸ் கூட்டணி நீட்சியாக தற்போது ஆஸ்திரேலியாவிற்கு தேவையான அணுசக்தி நீர்முழ்கி கப்பல் குறித்த தொழில் நுட்பத்தை வழங்க அமெரிக்காவும், பிரிட்டனும் சம்மதம் தெரிவித்துள்ளன.

இந்த தொழில் நுட்பத்தின் மூலமாக அணு சக்தியினால் இயங்கும் நீர் மூழ்கி கப்பல்களை ஆஸ்திரேலியாவில் கட்டமுடியும் என்றும், இந்த தொழில் நுட்பம் ஆஸ்திரேலிய பாதுகாப்புக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவசம் தற்போது டீசல்- ஜனரேட்டர் மூலம் இயங்கும் நீர் மூழ்கி கப்பல்கள் மட்டுமே உள்ளது. அணுசக்தி – நீர்மூழ்கி தொழில் நுட்பம் மட்டும் இல்லாமல், ராணுவ ரீதியான ஒத்துழைப்பை வழங்கவும், தகவல் பரிமாற்ற ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

United States and Britain have agreed to provide Australia with nuclear submarine technology...
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பீட்டர் ஜென்னிங்க்ஸ், ஆஸ்திரேலியாவின் இந்த முயற்சி மகிழ்ச்சியளிப்பதாகவும், அணு சக்தி மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல் நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமானது என்று தெரிவித்துள்ளார். பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான அரசு, ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Link Source:  https://ab.co/39hUv9Z

leave a reply