Breaking News

ஆஸ்திரேலியாவில் வேலையின்மை சதவிகிதம் தொடர்ந்து 4 சதவிகிதமாக நீடிப்பு : கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 18 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவானதாக தகவல்

1970ஆம் ஆண்டு காலத்தில் இருந்த அதே வேலைவாய்ப்பின்மை, அரை நூற்றாண்டைக் கடந்தும் தொடர்ந்து 4% ஆகவே நீடிப்பதாகவும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் இளைஞர்கள் அந்த வேலைகளுக்கு தகுதியானவர்களாக செல்வதும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் புள்ளியியல் ஆணையம் தெரிவித்துள்ள ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் 4% ஆகவே நீடித்து வருவதாகவும், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் பொருளாதார மேம்பாடு அடையும் வகையிலான 18 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி இருப்பதாகவும் அவை பெரும்பாலும் இளைஞர்களால் நிரப்பப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Unemployment in Australia continues to rise to 4%. 18,000 new jobs created in last month alone.கடந்த ஓராண்டு காலத்தில் 4 லட்சம் புதிய முழுநேர பணிகள் உருவாகி இருப்பதாகவும், அதே நேரம் பகுதி நேர பணிகள் 65 ஆயிரம் இடங்கள் குறைந்திருப்பதாகவும் ஆஸ்திரேலிய புள்ளியியல் துறையில் தொழிலாளர் பிரிவு தலைவர் Bjorn Jarvis கூறியுள்ளார். ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் சமீப காலத்தில் உருவான புதிய வேலைவாய்ப்புக்கான பணியிடங்களுக்கு ஆட்களை தேடும் பணியில் நிறுவனங்கள் தீவிரமாக இறங்கியுள்ளன.

அதேநேரத்தில் பணியாளர்கள் உரிய பணியிடங்களை ஒதுக்க பதிலும் அதிக ஊதியம் பெறுவதிலும் கவனமுடன் இருப்பதாகவும் அதற்காக அவர்கள் பல்வேறு நிறுவனங்களை அணுகுவதாகவும் புள்ளியியல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள், சுற்றுலா, வர்த்தகம், ஓட்டல் உள்ளிட்ட துறைகள் தற்போது மீட்சி அடைந்து வருவதாகவும் அதற்கான பணியாளர்களுக்கான வாய்ப்பு மேலும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நியூ சவுத் வேல்ஸ் குயின்ஸ்லாந்து சிட்னி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு காரணமாக ஏராளமானோர் வேலை இழக்கும் சூழல் உருவானதாகவும் அதனை ஈடு செய்யும் நடவடிக்கைகளில் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் புள்ளியியல் ஆணையத்தின் தொழிலாளர் பிரிவு தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.