Breaking News

அப்டேட் செய்யப்படாத ஆஸ்திரேலியாவின் கோவிட் சேஃப் செயலி : புதிய வகை டெல்டா வகை வரைஸ் குறித்த தகவல்களை பதிவேற்ற இல்லை என புகார்

Undeveloped Australian covid safe processor. Complains of not uploading information about the new type of delta type varices

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக தொற்று பரவலை கண்காணிக்கும் வகையில் கோவிட் சேஃப் என்ற செயலி உருவாக்கப்பட்ட மாகாண அரசுகள் மற்றும் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது.

Undeveloped Australian covid safe processor. Complains of not uploading information about the new type of delta type varices.தொற்று பரவலை கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட செயலிக்கு தயாரிப்பு மற்றும் பராமரிப்புச் செலவுக்கு ஒரு லட்சம் டாலர் செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியான நிலையில் செயலியில் எந்தவித அப்டேட்டும் செய்யப்படாததால் புதிய வகை டெல்டா வைரஸ் குறித்த எந்தவிதமான விவரமும் அதில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. 15 நிமிடத்தில் ஒன்றரை மீட்டர் தொலைவில் இருப்பவர்களை இந்த செயலி மூலம் தெரியப்படுத்தும் என்று கூறப்பட்ட நிலையில் அதுவும் சரிவர வேலை செய்யவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.

வீரியமிக்க புதிய வகை வைரஸுக்கு ஏற்றபடி இந்த பாரா மீட்டர்களை மாற்ற வேண்டும் என்று தொற்று நோயியல் நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 15 நிமிடம் என்ற இந்த கால அவகாசம் ஒருபோதும் பலன் அளிக்காது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். பெரும்பாலான தலை நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்த செயலி மூலமாக தொற்று பாதித்தவர்களை கண்டறிவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய வகை தொற்றுப் பரவல் பெரும்பாலான நகரங்களில் தொடங்கியுள்ள நிலையில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளுக்குப் பிறகு ஆகவே ஊரடங்கு நடவடிக்கைகளை முற்றிலுமாக கைவிட முடியும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Undeveloped Australian covid safe processor.தொற்றுப் பரவல் தொடர்பை கண்காணிக்க 15 நிமிடங்கள் கால தாமதத்தில் ப்ளூடூத் வழியாக தகவல் பரிமாற்றம் என்பது நடைபெறவில்லை என்றும் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் தகவல் பரிமாற்றம் நடைபெறும் வகையில் செயலில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

7.5 மில்லியன் பயனாளர்கள் மட்டுமே கோவிட் சேஃப் செயலியில் பதிவு செய்துள்ளதாகவும் தொடக்கத்தில் இருந்து இதுவரை 800 பேர் மட்டுமே அதில் பதிவு செய்யப் பட்டவர்களில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு அதன்மூலம் அவர்களின் தொடர்புகள் அறியப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அவர்களும் ஏற்கனவே சுகாதாரத் துறை மூலமாக நேரடியாக கண்டறியப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/3qD5OkY