Breaking News

பசுபிக் தீவான Tonga -ல் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்து ஏற்பட்ட சுனாமியால் கடுமையான பாதிப்பு : ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நிவாரண உதவிகளுடன் கூடிய கண்காணிப்பு கப்பல்களை Tongaவுக்கு அனுப்பிவைப்பு

பசுபிக் தீவான Tonga வில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட சுனாமி காரணமாக தீவு முழுவதுமாக உருக்குலைந்தது. இதில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

Undersea volcanic eruption on tsunami in Pacific island of Tonga. Australia, New Zealand send relief aid ships to Tonga.இந்நிலையில், கடலுக்கு அடியில் புதைக்கப்பட்டு இருந்த கேபிள் துண்டிக்கப்பட்டதால் தொலைத் தொடர்பு சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிஉலகத்தில் இருந்து முழுவதுமாக Tonga துண்டிக்கப்பட்டுள்ளதால் முழுமையான சேத விவரங்கள் இதுவரை தெரியவில்லை என்று கூறப்படுகிறது. பிரதேச அளவிலான தொலைதொடர்பு நடவடிக்கைகள் தற்போது படிப்படியாக மீட்கப்பட்டு வருவதாகவும் முழுமையான சேவைகள் மீட்பதற்கு இரண்டு வாரங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள Tonga தூதரகம் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் முழுவதுமாக எரிமலை வெடிப்பின் சாம்பல் படர்ந்தும் மரங்கள் முறிந்து விழுந்து கடுமையான சேதம் ஏற்பட்டு இருப்பதையும் காட்டுகின்றன.

Undersea volcanic eruption on tsunami in Pacific island of Tonga. Australia, New Zealand send relief aid ships to Tonga..இதனையடுத்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து முதலுதவி கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவை வெள்ளிக்கிழமை Tonga தீவுக்கு சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் நன்னீர் மற்றும் உப்பு நீக்கும் கருவிகள் கப்பல் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அதே நேரத்தில் கோவிட் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் பெரும்பாலான நாடுகள் தங்களது உதவிகளை ரிமோட் மூலமாகவே செய்ய வேண்டும் என்றும், படைகளை நேரில் அனுப்ப வேண்டாம் என்றும் ஐரோப்பிய யூனியன் கேட்டுக்கொண்டுள்ளது.

Tonga தீவின் தலைநகரான Nuku’alofa வில் முழுவதுமாக சாம்பல் படர்ந்து குடியிருப்பு பகுதிகளில் தெரியாத அளவிற்கு மூடி இருப்பதாக தூதரகம் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் தெரியவந்துள்ளது. விமான ஓடுதளம் படிப்படியாக சீரமைக்கப்பட்டு விரைவில் விமான சேவை தொடங்கப்பட்டால் அதன்மூலமாக நிவாரண பொருட்களை விரைந்து அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தூதரக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Undersea volcanic eruption on tsunami in Pacific island of Tonga. Australia, New Zealand send relief aid ships to Tonga,நியூசிலாந்து பாதுகாப்பு துறையின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடற்படை கப்பல் மூலமாக நிவாரண பொருட்கள் மற்றும் கடல் நீரை நன்னீராக்கும் கருவிகள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டு இருப்பதாகவும் மேலும் தேவைப்படும் பட்சத்தில் ஐரோப்பிய யூனியனின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் Nanaia Mahuta கூறியுள்ளார்.

இதேபோன்று, ஆஸ்திரேலியாவின் C130 ஹெர்குலிஸ் விமானம் தயார் நிலையில் இருப்பதாகவும் நிவாரண பொருட்களோடு காத்திருக்கும் விமானம் தீவில் ஓடுதளம் சரியானதும் அனுப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3IkhyjV