Breaking News

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக ஐநா சபை அவசர ஆலோசனை : நம்பத்தகுந்த தகவல்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணையத் தலைவர் தகவல்

தாலிபான்கள் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தானை கொண்டு வந்துள்ள நிலையில் தலைநகர் காபூலில் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகின்றன. காபூல் விமான நிலையத்தில் குவிந்திருக்கும் மக்களை விரட்டி அடிப்பதற்கு தொடர்ந்து துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகை குண்டு வீசுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தாலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழல் தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே ஐநா மனித உரிமைகள் ஆணையம் அறிவித்திருந்தது.

Michelle Bacheletஆப்கானிஸ்தானில் இருந்து வரக்கூடிய தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கு தாலிபான்கள் அப்பட்டமான மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கான உரிய ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றதாகவும் ஐநா மனித உரிமைகள் ஆணைய தலைவர் Michelle Bachelet கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுபான்மை மக்கள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் தாலிபான்கள் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், பெண் உரிமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் கொல்லப்படுவது கடுமையான கண்டனத்திற்கு உரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் சம்பவங்கள் பல்வேறு உலக நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பதாகவும், ஆனாலும் தாலிபான்கள் தங்களது வன்முறை நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

UN urgent consultation on ongoing human rights abuses in Afghanistan. The head of the Human Rights Commission said that credible information was now availableஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி பணி உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தக் கூடாது என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் பெண்கள் விரைவில் பணிக்கு திரும்புவதற்கான உரிய சூழல் ஏற்படுத்தப்படும் என்று தாலிபான்கள் கூறியுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதோடு அவர்கள் ஆப்கானிஸ்தானில் நிம்மதியாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தெரிவித்துள்ளன.

Link Source: https://ab.co/3ziFZu8