Breaking News

ரஷ்யாவை விரட்டி அடித்து பாம்புத் தீவை கைப்பற்றிய உக்ரைன் ராணுவம்..!!

போரின் ஆரம்பக் கட்டத்தில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பாம்புத் தீவை மீண்டும் உக்ரைன் ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

Ukrainian army defeated Russia and captured Snake Island

உக்ரைனில் இருந்து ரஷ்யாவின் மாஸ்கோவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தை மேற்கொள்ள பாம்புத் தீவு முக்கிய இடமாக இருந்தது. படையெடுப்பின் தொடக்கத்திலேயே உக்ரைனிடம் இருந்து ரஷ்யா கைப்பற்றி தன்னிடம் வைத்துக் கொண்டது. ஆனால் அதை மீண்டும் மீட்பதற்கு ரஷ்யா தொடர்ந்து போராடி வந்தது.

கடந்த வாரம் முதல் ரஷ்யா மீது உக்ரைன் தொடுத்து வந்த போர் மேலும் உக்கிரமாக இருந்தது. வான்வழி மூலமாக ரஷ்யா மீது கடும் தாக்குதல்களை உக்ரைன் ராணுவ வீரர்கள் மேற்கொண்டு வந்தனர். அதன்பலனாக தற்போது மீண்டும் பாம்புத் தீவை தன்வசமாக்கி கொண்டுள்ளது உக்ரைன்.

Ukrainian army defeated Russia and captured Snake Island.உக்ரைனின் தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பாம்புத் தீவில் இருந்த கடைசி இரண்டு ராணுவ வீரர்கள் படகில் தப்பிச் சென்றதாக உக்ரைன் ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பாம்புத் தீவை உக்ரைன் தன்வசமாக்கிக் கொண்டதை அடுத்து, உக்ரைன் – ரஷ்யாவுக்குமான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. பாம்புத் தீவை உக்ரைன் கைப்பற்றியுள்ளதை ரஷ்யாவும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் அதனால் ரஷ்யாவுக்குள் உணவுப் பஞ்சம் வந்துவிடும் என்று உக்ரைன் கூறுவதில் முற்றிலும் உணை இல்லை. இதை சரித்திர வெற்றியாக நினைத்து உக்ரைன் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டாம் என என ரஷ்ய ராணுவம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.