Breaking News

ரஷ்யா ராணுவம் தலைநகர் கீவ்-வில் பிரவேசித்துவிட்டதாக உக்ரைன் நாட்டின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Ukraine's minister says Russian army has entered the capital, Kyiv.

உக்ரைன் மீது ரஷ்யா தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் மேற்குப் பகுதியை தாக்க தொடங்கிய ரஷ்யா, கடந்த வெள்ளிக்கிழமை கீவ் நகரின் வெளிப்புற பகுதியை கைப்பற்றியுள்ளது.

இதுதொடர்பாக உக்ரைன் ராணுவம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், டைமர் மற்றும் இன்வான்கிவ் குடியிருப்புப் பகுதிகளில் உக்ரேனிய ஆயுதப் படைகளின் வான்வழி தாக்குதல் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Ukraine's minister says Russian army has entered the capital, Kyiv..இந்நிலையில் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் எதிரி நாடு என்று ரஷ்யாவை குறிப்பிட்டு, கீவ் நகரின் பத்து கிலோ மீட்டரை தொடர்ந்து இருக்கும் ஓபோலோன் பகுதியை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் ரஷ்ய துருப்புக்களின் நடமாட்டத்தை பொதுமக்கள் அரசுக்கு தெரியப்படுத்தவும் என்று பாதுகாப்பு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் முழுவதும் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இதற்கிடையில் நாட்டு மக்களுக்காக வீடியோ வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜிலென்ஸ்க்கீ, மக்களை தாக்கவில்லை என்று ரஷ்யா கூறி வருகிறது. ஆனால் இது முற்றிலும் பொய்யாகும். உண்மையில், அவர்கள் தாக்குதலை எங்கு நடத்த வேண்டும் என்கிற தெளிவுடன் செயல்படவில்லை என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

Link Source: https://bit.ly/3tik2JY