Breaking News

இணையம் வழியாக ரஷ்யா தொடுத்து வரும் தாக்குதல்களை முறியடிக்க விரிவாக்க தொழில்நுட்ப உதவியை வழங்குமாறு உக்ரைன் நாடு ஆஸ்திரேலியாவை வலியுறுத்தியுள்ளது.

Ukraine has urged Australia to provide extensive technical assistance to counter Russia's attacks on the Internet.

கடந்த சில வாரங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ரஷ்யா தன்னுடைய எல்லைகளில் ராணுவ கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. இதை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் கருத்து வெளியிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் நாட்டுக்குள் பிரவேசிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தயாராகி வருகிறார். இந்த படையெடுப்பு ரஷ்யாவுக்கு பேரழிவு என்று கூறினார்.

Ukraine has urged Australia to provide extensive technical assistance to counter Russia's attacks on the Internetஇந்நிலையில் இதுதொடர்பாக பேசிய ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் மாரீஸ் பெயுடன் பேசிய உக்ரைன் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் டிம்ட்ரோ குலேபா, உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆஸ்திரேலியாவு ஆதரவை மீண்டும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனுக்குள் ரஷ்யாவின் சைபர் தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும், அதற்கு உதவுமாறும் ஆஸ்திரேலியாவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆஸ்திரேலிய அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது. எனினும் இதற்குவேண்டி எந்தவிதமான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. வெறும் பேச்சுவார்த்தைக்குள் இருநாடுகளும் சமரசம் செய்துகொண்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் உக்ரைனுக்கு தொழில்நுட்ப வகையில் உதவுவதாக வெளியான தகவலை ஆஸ்திரேலிய அதிபர் ஸ்காட் மாரீசன் மறுத்துள்ளார். தூதரக அதிகாரிகள் தொடர்ந்து உக்ரைன் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3FR20T6