உக்ரைன் நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளை கைப்பற்றுவதற்கு ரஷ்யா முனைப்பு காட்டி வருகிறது. ஏற்கனவே கார்கிவ், கீவ், மரியுபோல் மற்றும் டான்போஸ் போன்ற இடங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது.
குறிப்பாக மரியுபோல் மற்றும் டான்பாஸை கைப்பற்றுவதில் ரஷ்யா முனைப்பு காட்டி வருகிறது. இதுதொடர்பாக பிபிபி வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எக்காரணத்தை கொண்டும் டான்பாஸை ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்கபோவதில்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில் மரியுபோல் நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷைமிஹல், இன்னும் மரியுபோல் நகரம் உக்ரைன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. தொடர்ந்து உக்ரைன் நாட்டு படை மரியுபோல் நகரில் முன்னேறி வருகிறது என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா உடன்படவில்லை என்றால், எங்கள் நாட்டுக்காக நாங்கள் தொடர்ந்து போரிடுவோம். இறுதி வரை போரிடுவோம் என்று ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.