Breaking News

ஆஸ்திரேலியாவின் Northern Territory பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு : பெண் சுகாதார பணியாளருக்கும் தொற்று பாதிப்பு

Two more infected with the corona virus in Australia's Northern Territory. Infection of a female health worker

ஆஸ்திரேலியாவின் Northern Territory பகுதியில் கடந்த ஒரு இரவில் மட்டும் இரண்டு பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆண் ஒருவர். அவர் Royal Darwin மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Katherine மற்றும் ராபின்சன் நதி பகுதியில் மேலும் புதிதாக 25 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு வந்தவர்கள் மூலமாக தொற்று பரவல் அதிகரித்துள்ளது. முப்பத்தி ஆறு வயதான ஆண் ஒருவருக்கும், 59 வயதான பெண் சுகாதார பணியாளருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Two more infected with the corona virus in Australia's Northern Territory. Infection of a female health worker.முதலில் வைரஸ் பாதித்த இருவரும் பூர்வகுடி மக்கள் அல்ல என்று முதலமைச்சர் Michael Gunner தெரிவித்திருந்த நிலையில், பின்னர் அவரது அலுவலகத்தின் சார்பில் அது தவறான தகவல் என்றும் வைரஸ் பாதித்த இருவரும் பூர்வ குடிமக்கள் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட ஆண் இதற்கு முன்னதாக யாருடைய தொடர்பும் இல்லை என்றும், பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர் பெண்ணின் தொடர்புகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களில் யாருக்கேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்யப்படும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

Cairns பகுதியிலிருந்து கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமாக 21 வயது பெண் ஒருவர் வந்ததாகவும் அவருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறையும் காவல் துறையும் அறிவுறுத்தி வருகிறது.

Two more infected with the corona virus in Australia's Northern Territory. Infection of a female health worker,,அதேநேரத்தில் Northern Territory பகுதியில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை பின்பற்ற வேண்டும் என்றும், தொற்று பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்ட இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் முதலமைச்சர் Michael Gunner கேட்டுக்கொண்டுள்ளார். Binjari பூர்வ குடிமக்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் கண்காணிக்கப்படும் என்றும் அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Katherine பகுதியில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் அதனை அதிகரிக்கும் பட்சத்தில் தொடர் பாதிப்பை குறைக்க முடியும் என்றும் தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். மக்கள் தாமதிக்காமல் தங்களது தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Link Source: https://ab.co/3kYCh3o