Breaking News

Northern Territory மாகாணத்தில் இரவு நேரங்களில் நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் இருவர் பலி : சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸ் விசாரணை

Two killed in two separate road accidents in Northern Territory at night. Police capture CCTV footage.

Northern Territory மாகாணத்தில் Jingili பகுதியில் உள்ள McMillans சாலையில் இரவு 9.30 மணிக்கு Darwin General Cemetery அணுகு சாலை வழியாக வந்த கார் மற்றும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில் இருசக்கர வாகன ஓட்டி 26 வயதான ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக மீட்புப்பணியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் காரில் இருந்த யாருக்கும் காயம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Two killed in two separate road accidents in Northern Territory at night. Police capture CCTV footage,விபத்து குறித்து விசாரணை மாகாணத்தின் காவல் கண்காணிப்பாளர் Riva Zio, சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும், போக்குவரத்து அதிகாரிகள் அந்த இடத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் அது இடையூறு ஏற்படுத்தும் விதமாக உள்ளதாகவும் Riva Zio கூறியுள்ளார். இதே போன்று Dundee கடற்கரைக்கு அருகே உள்ள Fog Bay சாலையில், வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்று விசாரணை நடத்திய போது வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டது தெரிய வந்தது.

இந்த இரு வேறு சாலை விபத்துகள் குறித்தும் தடயங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Two killed in two separate road accidents in Northern Territory at night. Police capture CCTV footageவிசாணைகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ள நிலையில் விபத்துக்கான காரணங்கள் அல்லது நேரில் பார்த்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், தொலைபேசி வாயிலாக விவரங்களை அளிக்கலாம் என்றும் NT மாகாணத்தின் காவல் கண்காணிப்பாளர் Riva Zio தெரிவித்துள்ளார். மாகாணத்தில் ஆண்டு தோறும் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையான 11ல் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே 7 ஆக அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Link Source: https://ab.co/3w1iQxt