Breaking News

சிரியாவில் காடுகளுக்கு தீ வைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருபத்தி நான்கு பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Twenty-four people arrested in Syria forest fires have been executed.

சிரியாவின் நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் சிரியாவின் கடற்கரையும் மாகாணமான லட்டாக்கியாவில்,ஏற்பட்ட தீவிபத்தால் பல்லாயிரம் ஏக்கர் காடுகள் அழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரிய அதிபர் பஷார் அல் அசாதின் பூர்வீக இல்லமும் இந்த தீயால் சேதமடைம்தது.

Twenty-four people arrested in Syria forest fires have been executed,கடந்த செப்டம்பர் மாதம் எரியத்தொடங்கிய தீ தீயனைப்பு வீரர்களின் பெரும் முயற்சியால் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் அணைக்கப்பட்டது. இந்த அறிக்கையில் இருபத்தி நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மேலும் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் மரணதண்டனை நிகழ்த்தப்படுவது என்பது சர்வ சாதாரணமாக நிகழக் கூடிய விஷயமாக இருந்தாலும் ஒரே நாளில் 24 பேருக்கு மரணதண்டனை நிகழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது .

மேலும் இந்த தீ விபத்தால் 12க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலானது. உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமான விவசாய நிலங்களும் பண்ணைகளும் எரிந்து சேதமடைந்தன.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிபர் பஷீர் முஹம்மது நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

Twenty-four people arrested in Syria forest fires have been executed,.இந்த தீ விபத்தில் ஏராளமான ஆலிவ் மரங்களும் புகையிலை தோட்டங்களும் ஆப்பிள் மரங்களும் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவத்திற்கு காரணமாக கூறப்பட்ட ஒரு சிலரின் ஒப்புதல் வாக்குமூலத்தை வீடியோவாக வெளியிட்ட சிரிய ஊடகங்கள் மரணதண்டனை எங்கு நிகழ்த்தப்பட்டது என்பதையும் குறிப்பிடவில்லை. சிரியாவின் உள்நாட்டு பொருளாதாரத்தை சீர்குலைக்க இதில் வெளிநாட்டு சதியும் இருப்பதாக ஏற்கனவே சிரிய அதிகாரிகள் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/3vAGb6S