Breaking News

Tweed ஆற்றின் கரை உடைந்தது, வடக்கு NSW-க்கு வெள்ள அபாய எச்சரிக்கை !

பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள வேளையில், Murwillumbah-வை சுற்றிய சில நகரங்களில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆதலால் NSW -ன் வடக்குப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.

மழை பொழிவு குறைந்திருந்தாலும் வெள்ள அபாயம் இன்னும் குறையவில்லை என்று வானிலை ஆய்வு மையம்(BOM) தெரிவித்துள்ளது. வடபகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் மத்திய வடக்கு கடற்கரைப் பகுதிகளில் , 400 முதல் 500 mm மழை பொழிவு இருந்ததாக BOM தெரிவித்துள்ளது.

Condong -லிருந்து Tumbulgum வரை உள்ள பகுதிகள் மற்றும் Tweed ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், வீட்டை விட்டு வெளியேறும் உத்தரவினை, State Emergency Service(SEM) பிறப்பித்தது. Tumbulgum அருகில் Tweed ஆற்றின் கரை உடைந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது மிக ஆபத்தான இடம் என கருதப்படுவதாகவும் SES Spokesperson தெரிவித்துள்ளார். Bellingen, Thora ,Urunga உட்பட பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளத்தினால் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டதால், தானும் தன் கணவரும் மிகவும் கஷ்டப்படுவதாக Belligen-ல் வசிக்கும் Shelley Rowntree தெரிவித்தார்.

கடந்த மூன்று நாட்களாக 350mm மழை பெய்துள்ளது எனவும், இன்னும் மழை பெய்துகொண்டு இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மழைப் பொழிவு விரைவில் நிற்கும் என நம்புவதாகவும், இன்னும் மழை பெய்தால் இவர்கள் வசிக்கும் பகுதி மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

12 மாதங்களுக்கு முன்பாக பல பகுதிகளில் Bushfire அச்சுறுத்தலாக இருந்தது. மிகப் பெரிய மாற்றமாக , தற்போது இந்த வெள்ள அபாயம் உள்ளதாக தன்னார்வ தீயணைப்பு வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். எல்லை மீறிய ஆபத்துக்கள், ஒன்றன் பின் ஒன்றாக வருவதாக Rowntree கூறியுள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்று மிதமான வெள்ளம் வர வாய்ப்பு இருந்ததால், Kempsey பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. வெள்ள அபாய சூழ்நிலை இன்னும் அங்கு அதிகரித்து வருவதாகவும் BOM Flood Operations Manager Justin Robinson தெரிவித்துள்ளார். மின்சாரம் தொலைத்தொடர்பு ,இணையம்,குடிநீர் மற்றும் கழிவுநீர் சேவைகளில் தடை ஏற்படலாம் எனவும், வானிலை எச்சரிக்கை மற்றும் சாலை போக்குவரத்து தடை ஆகிய செய்திகளை மக்கள் உன்னிப்புடன் கவனிக்குமாறும் SES எச்சரித்துள்ளது.

Kempsey-லிருந்து Queensland எல்லை வரை உள்ள 2600 வீடுகளில், மின்சார சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக Essential Energy தெரிவித்துள்ளது. வெள்ளம் சூழ்ந்தால் சாலைகள் துண்டிக்கப்படும் என்பதால், மக்கள் தங்கள் பகுதிகளில் சிக்கிக் கொள்ளலாம். ஆதலால் இந்த சூழ்நிலையை, மிகுந்த எச்சரிக்கையோடு கவனிக்குமாறு அங்கு வசிக்கும் மக்களுக்கு SES அறிவித்துள்ளது. இவ்வாறு சிக்கித்தவிக்கும் மக்களையும் காப்பாற்றுவது மிக ஆபத்தாக இருக்கும் எனவும் SES தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.

கடந்த வெள்ளிக் கிழமையிலிருந்து, NSW-ன் Terania Creek -ல் 578 mm மழை பெய்துள்ளதாக BOM தெரிவித்து உள்ளது. குறைந்த காற்றழுத்த மண்டலம் தெற்கே Sydney மற்றும் NSW தென்கடலினை நோக்கி நகர்வதால், இது வலுவிழக்க தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வாளர் Ms. Imielska தெரிவித்துள்ளார். உயரமான கடல் அலை மற்றும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடற்கரையில் மிகப்பெரிய அரிப்பை கடந்த திங்கட்கிழமையன்று ஏற்படுத்தியுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தென் கிழக்கு Queensland கடற்கரை பகுதியில், மிக அதிகஅளவில் மழை பொழிவையும், பலத்த காற்றையும் உண்டாக்கியதாக தெரிகிறது. Gold Coast பகுதியில் மிகப்பெரிய அளவிலான மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 SES பணியாளர் குழுவுடன் தீயணைப்புத்துறை, NSW RFS மற்றும் NSW Police தயார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.