Breaking News

நியூ சவுத் வேல்ஸ்-ல் இருந்து மூன்று மாகாணங்கள் வழியாக மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு வந்த ட்ரக் ஓட்டுநர்கள் : பெர்த் வந்தடைந்த இருவருக்கும் டெல்டா வைரஸ் பாதிப்பு உறுதி

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருந்து விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா வழியாக மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்ட இரண்டு ட்ரக் ஓட்டுனர்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெர்த் வந்தடைந்த இருவருக்கும் வழக்கமான நடைமுறையின்படி பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது. அவர்களின் பயண நேரத்தில் குறைந்தபட்சம் ஆன நபர்கள் உடனேயே தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு தேவை இருக்கும் பட்சத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நெருங்கிய தொடர்பில் இருந்த 4 பேர் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நேரத்தில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள தேவை இன்றி பல்வேறு நபர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டாம் என்றும் மேற்கு ஆஸ்திரேலிய ப்ரீமியர் Mark McGowan கேட்டுக் கொண்டுள்ளார்.

Truck drivers from New South Wales to Western Australia via three provinces, Two arriving in Perth confirmed delta virus infectionமாகாண எல்லைகளில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் வைரஸ் பாதிப்பு குறித்து உஷார்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அங்கு வரும் ஓட்டுநர்கள் தங்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் யாரேனும் வந்து சென்று இருந்தால் அவர்கள் 14 நாட்களில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், தேவைப்பட்டால் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

70 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்ட பின்னரே எண்ணங்களை முழுவதுமாக திறப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் அதுவரை கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் ப்ரீமியர் Mark McGowan கூறியுள்ளார்.

Link Source: https://bit.ly/2XXGkEz