Breaking News

மத்திய குயின்ஸ்லாந்தில் ஆம்புலன்ஸ் மீது டிரக் வாகனம் மோதி விபத்து : இரண்டு முதியவர்கள் உயிரிழந்த நிலையில் ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

Truck collides with ambulance in central Queensland. Driver admitted to hospital after two elderly men die

மத்திய குயின்ஸ்லாந்து பகுதியான Stanwell -ல் சாலை பணிகள் நடைபெற்றிருந்த நிலையில் Capricornia போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்த ஸ்டேஷனரி ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது டிரக் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த 87 மற்றும் 65 வயது முதியவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 41 வயதான டிரக் ஓட்டுநர் படுகாயங்களுடன் Rockhampton மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Truck collides with ambulance in central Queensland. Driver admitted to hospital after two elderly men die.சாலையில் இருந்து தடம் புரண்ட டிரக் வாகனம் ஆம்புலன்சில் பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டதாகவும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் ஆம்புலன்சில் இருந்த மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவரின் நிலைமை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்து தொடர்பாக சம்பவ இடத்தில் புலனாய்வு பிரிவு போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பிட்ட பகுதியில் விபத்து நடைபெற்றது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.

Link Source: https://ab.co/3vhTY2d