Breaking News

Northern Territory மாகாணத்தில் 2019-ம் ஆண்டு பழங்குடியின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் : இரவு நேரத்தில் திட்டமிடப்பட்ட கைது நடவடிக்கை அதிகாலை மாற்றப்பட்டதாக காவல் அதிகாரி சாட்சியம்

Tribal youth shot dead in Northern Territory in 2019

மத்திய ஆஸ்திரேலியாவின் தொலைதூர பகுதியான Yuendumu வில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சென்ற காவலர் Zachary Rolfe, அங்கு நடைபெற்ற மோதலில் துப்பாக்கியால் சுட்டார். இதில் 19 வயது பழங்குடியின இளைஞரான Kumanjayi Walker உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான சாட்சியங்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய காவல் அதிகாரி ஒருவர் சில ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அதில் பழங்குடியின இளைஞரின் கைது நடவடிக்கை இரவு நேரத்தில் திட்டமிடப்பட்டு இருந்ததாகவும், ஆனால் அது எந்தவித அறிவிப்பும் இன்றி அதிகாலை நேரத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tribal youth shot dead in Northern Territory in 2019.கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள அதிகாரி Jody Nobbs, பழங்குடியின இளைஞர் கைது விவகாரத்தில் உள்ளூர் காவல் துறையின் உதவியை கேட்டுப் பெற்றதாகவும் அதே நேரத்தில் கூடுதல் காவல் படையை கைது நடவடிக்கைக்கு முந்தையநாள் அழைத்ததாகவும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்படவில்லை என்றும், இரண்டு காவலர்கள் கைது செய்ய முற்பட்ட போது அவர்களை கோடாரியால் Kumanjayi Walker தாக்க முற்பட்டதாகவும் Jody Nobbs கூறியுள்ளார்.

காவல்துறை குழுக்களுடன் சென்ற காவல் அதிகாரி Zachary Rolfe வீடு ஒன்றில் சென்று பழங்குடியின இளைஞரை கைது செய்ய முற்பட்ட நிலையில் அங்கிருந்த மருத்துவ கத்தரிக்கோலை எடுத்து காவரின் தோள்பட்டையில் மூன்று முறை பலமாக குத்தியுள்ளார். இதனை அடுத்த காவலர்களை தாக்கி விட்டு அங்கிருந்து அவர் தப்பிச் செல்ல முயன்ற போது பாதுகாப்பு காரணங்களுக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதில் இளைஞர் உயிரிழந்து விட்டதாகவும் வழக்கறிஞர்கள் ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இந்த விவாகரத்தில் சம்பவ இடத்தில் இருந்த அனைத்து காவலர்களும் சாட்சியமாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இது முற்றிலும் பாதுகாப்பு நோக்கில் நடத்தப்பட்டது என்பது டிபன்ஸ் தரப்பு வழக்கறிஞர் David Edwardson வலுவாக முன்வைத்தார்.

சம்பவ நேரத்தில் காவல்துறை அதிகாரியாக எப்படி செயல்பட வேண்டுமோ, அதன்படி உரிய முறையில் அவர் நடந்து கொண்டுள்ளதாகவும் இதில் கொலைக்குற்றம் நோக்கம் அல்ல என்றும் உச்சநீதிமன்றத்தில் David Edwardson தெரிவித்தார்.

Tribal youth shot dead in Northern Territory in 2019..Alice Springs பகுதியில் பழங்குடியினர் இளைஞரை கைது செய்யும் விவகாரத்தில் ஐஆர்டி எனப்படும் கூடுதல் படைகளை அங்கு குவித்தது தொடர்பாகவும் அவர்களை வழிநடத்தி சென்ற கூடுதல் சார்ஜென்ட் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். பழங்குடியின இளைஞர் ஏற்கனவே பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர் என்ற காரணத்தால் அவரை கைது செய்வதில் அதிகப்படியான சவால் நிறைந்துள்ளது என்பதை காவலர்கள் அறிவுறித்தியதாகவும், அதன் அடிப்படையில் திட்டம் தீட்டப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இதனை அடுத்து IRT படையை அங்கு குவித்தது தொடர்பாக காவல் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளனர்.

Link Source: https://ab.co/3rL6aIp