Breaking News

இனப்பாகுபாட்டை சந்திக்கும் பழங்குடியின மூதியவர்கள்- ஆய்வில் அதிர்ச்சி..!!

விக்டோரியாவில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் பாகுபாடு, நில அபகரிப்பு, சட்ட அநீதி மற்றும் குழந்தைகளை பறித்துக் கொள்ளுதல் உள்ளிட்டகொடுமைகளுக்கு ஆளாவதாக யூரூக் நீதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Tribal Elders Facing Racial Discrimination - Study Shocks,

கடந்த மே 2021-ம் ஆண்டு யூரூக் நிதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது. ராயல் ஆணைக்குழுவுக்கு இருக்கும் அதிகாரங்கள் இதற்கும் வழங்கப்பட்டன. சமீபத்தில் ஆணையின் தலைவர் எலோனார் பரூக், பழங்குடியினத்தின் முதியோர் வாழ்வுநிலை குறித்த ஆய்வை தொடங்கினார்.

Tribal Elders Facing Racial Discrimination - Study Shocks,.அதன்படி விக்டோரியாவில் வசிக்கும் பழங்குடியினச் சமூகங்களை சேர்ந்த 200 முதியவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதன்படி அரசின் கொள்கை முடிவுகள் அவர்களுடைய வாழ்வை கேள்விகுறியாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ள அவர்கள், தங்களுடைய எதிர்காலமும் தங்களின் சந்ததிகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இடைக்கால ஆய்வு முடிவுகளை யூரூக் நிதி ஆணைக்குழு விக்டோரியா நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த ஆய்வின் முடிவாக பழங்குடியினத்தவர்களின் சமகாலச் சூழலில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான புதிய வழிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ஆணைக் குழு கேட்டுக்கொள்ண்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் வரும் 2026-ம் ஆண்டில் முழுமையாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.