Breaking News

தெற்கு ஆஸ்திரேலியாவில் மீண்டும் அமலுக்கு வரும் பயணக் கட்டுப்பாடுகள்: விக்டோரியா எல்லைகளை மூடி ப்ரீமியர் Steven Marshall நடவடிக்கை

புதிய வகை டெல்டா வைரஸ் தெற்கு ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் தொடக்க நிலையில் எல்லைகள் மூடப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அது அமலுக்கு வந்துள்ளது. விக்டோரியாவில் அதிக அளவில் வைரஸ் பாதிப்பு உள்ள நிலையில் அங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் விக்டோரியாவில் இருந்து தெற்கு ஆஸ்திரேலியா வருவதற்கான எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

க்ரேட்டர் மெல்போர்ன், Geelong மற்றும் Bacchus Marsh பகுதிகளிலிருந்து தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு வீட்டிற்கு வரும் பயணிகள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்த படுவார்கள் என்றும் ப்ரீமியர் Steven Marshall தெரிவித்துள்ளார்.

Travel restrictions re-enacted in South Australia. Premier Steven Marshall move to close Victoria borderவிக்டோரியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸ் பாதிப்பு மெல்போர்னில் சில இடங்களில் கண்டறியப்பட்டுள்ளதால் அங்கும் தற்போது ஒரு இடைக்கால ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆஸ்திரேலியாவில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் ப்ரீமியர் Steven Marshall அறிவித்துள்ளார்.

தொற்றுப் பரவல் விவகாரத்தில் தாங்கள் மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருவதாகவும் 70 கிலோ மீட்டருக்கு உட்பட்ட பயண அனுமதி மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும் பிரிமியர் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு குயின்ஸ்லாந்து பிரிஸ்பேன் உள்ளிட்ட பகுதிகளுக்குமான பயண தடை நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் மேலும் சில குறிப்பிட்ட பகுதிகளை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

welcome to south ausஅதே நேரத்தில் தெற்கு ஆஸ்திரேலியாவில் அதிக எண்ணிக்கையிலான ஒன்றுகூடும் நிகழ்வுகள் நடத்தப்படக் கூடாது என்றும், பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் பிரீமியர் கேட்டுக்கொண்டுள்ளார். தொற்று பாதிப்பு தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அறிகுறிகள் தென்பட்டவர்கள் என 283 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெற்கு ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சரக்கு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு கொரனோ நெகட்டிவ் சான்று கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 48 மணி நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்கு உட்பட்டு அந்த சான்றிதழ் பெறப்பட்டு இருக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Link Source: https://bit.ly/3rbWnsW