Breaking News

நியூசிலாந்தில் இருந்து நியூ சவுத் வேல்ஸ் செல்வதற்கு பயண தடை : கொரோனா தொற்று அதிகரிப்பதன் காரணமாக திடீர் நடவடிக்கை

Travel ban from New Zealand to New South Wales. Sudden action due to increase in corona infection

தனிமைப்படுத்துதல் இல்லாமல் நியூசிலாந்தில் இருந்து நியூ சவுத் வேல்ஸ் செல்வதற்கு பயண தடை நீக்கப்பட்டு இருந்தது. தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் தற்காலிகமாக பயணத் தடை போடப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் தொட்டு எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. செவ்வாய் அன்று ஒரு நாள் மட்டும் 10 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இரண்டு பேரின் தொற்று பாதிப்புக்கு தொடர்பு சங்கிலி கண்டறியப்பட முடியாததன் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்படுவதாக நியூசிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

60 வயதான விமான நிலைய பேருந்து ஓட்டுனர் தொற்று பாதிப்புக்கு ஆளான நிலையில் அவரிடமிருந்து பலருக்கு தொற்று பரவியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் தொற்று பரவல் பாதிப்பு அதிகமுள்ள இடங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டு அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Travel ban from New Zealand to New South Wales. Sudden action due to increase in corona infection.இதனிடையே பாதிப்புக்கு உள்ளான பல்வேறு நபர்கள் தொடர்பான ஆய்வுகளை நியூசிலாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர். தொற்று பரவல் சங்கிலியை உடைக்கும் வகையில் பல்வேறு நபர்களை தனிமைப்படுத்துதலில் இருக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். சிட்னியின் Waverley ல் உள்ள பள்ளியில் 3 வயது குழந்தைக்கு தொற்று பாதிப்பு உறுதியானது மற்றும் Bondi Junctionல் பணியாற்றும் 20 வயது பெண் ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது எவ்வாறு என்பது குறித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். புதிய தொடர் பரவலுக்கான காரணங்கள் தெரிய வரும் வரை பயணத் தடை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Bondi Junction புதிய தொடர் பரவல் மையமாக உருவெடுத்துள்ள நிலையில் அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கும் வந்து சென்ற அனைத்து நபர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்யும்படியும் நியூ சவுத் வேல்ஸ் Respinse அமைச்சர் Chris Hipkins கேட்டுக்கொண்டுள்ளார்.

Link Source: https://ab.co/3gPa2CH