Breaking News

ஆஸ்திரேலியாவின் சிட்னி மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ராம் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் : Inner West பகுதியில் தொடங்கப்படும் ட்ராம் சேவைக்கு கட்டணங்களும் குறைப்பு

சிட்னியின் Inner West பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரும் பாதிப்புகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ராம் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வார இறுதியில் தொடங்கப்படும் ட்ராம் சேவைக்கு முன்பிருந்த கட்டணங்கள் தற்போது வெகுவாகக் குறைக்கப்படும் என்றும் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் போக்குவரத்துறை அமைச்சர் David Elliott கூறியுள்ளார்.

Tram services suspended in Sydney, Australia will be resumes... Reduction of fares for tram service in Inner Westபிரபல வழித்தடமான L1 பகுதியில் மத்திய நிலையத்தில் இருந்து Dulwich மலைப்பகுதி வரை இயக்கப்பட்டு வந்த ட்ராம் ரயில் பாதையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த பாதையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து தற்போது பயணிக்க தயார் நிலையில் உள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் David Elliott தெரிவித்துள்ளார்.

இத்தனை மாதங்களாக ட்ராம் சேவை நடைபெறாமல் இருந்த காரணத்தால் ஏராளமான சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாகவும், இது மிகவும் எதிர்பாராத நிகழ்வு என்றும் David Elliott கூறியுள்ளார். இதனையடுத்த குறிப்பிட்ட வழித்தடங்களில் 15 நிமிடத்திற்கு ஒரு ட்ராம் சேவை இயக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகள் சந்தித்த நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ட்ராம் சேவைக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக மாகாண அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tram services suspended in Sydney, Australia will be resumes.. Reduction of fares for tram service in Inner Westமுதலில் குறிப்பிட்ட வழித்தடங்களில் கட்டணக்குறைப்பு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும், ஆண்டு இறுதிக்குள் அனைத்து தடங்களிலும் விரைந்து அமல்படுத்தப்படும் போக்குவரத்துறை அமைச்சர் David Elliott கூறியுள்ளார். போக்குவரத்துறையில் நிலவும் சிக்கல்கள் அனைத்தும் அரசின் ஒத்துழைப்புடன் படிப்படியாக சரி செய்யப்பட்டு வருவதாகவும், தற்போது ட்ராம் சேவைக்காக வழித்தடங்கள் மற்றும் நடைமேடைகள் நவீன முறையில் மேம்படுத்தப்பட்டு உள்ளதாகவும் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைமை இயக்கக அதிகாரி Howard Collins தெரிவித்துள்ளார். ட்ராம் கட்டணங்கள் குறைக்கப்பட்டாலும் தரமான சேவை வழங்குவதில் அரசு சமரசம் செய்து கொள்ளாது என்றும் Howard Collins கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3gsW6xj