Breaking News

ஆஸ்திரேலியன் கண்ட்ரி சாய்ஸ் நிறுவனத்தின் இறைச்சிக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பல மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Traders say millions of dollars have been lost as a result of a ban in China on Australian Country Choice meat.

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேனை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியன் கண்ட்ரி சாய்ஸ் நிறுவனம் சீனாவிற்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து வருகின்றது. நாள் ஒன்றுக்கு சுமார் 1400 மாடுகளின் இறைச்சியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் திறன் வாய்ந்த இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக சீனாவிற்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து வருகிறது.

Traders say millions of dollars have been lost as a result of a ban in China on Australian Country Choice meat..இந்நிலையில் இந்த நிறுவனத்தின் இறைச்சிகளில் chloramphenicol என்ற வேதிப்பொருள் இருப்பதாகவும், துறைமுகங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனைகளில் இந்த முடிவு தெரியவந்திருப்பதால் அந்த நிறுவனத்திற்கு தடை விதிப்பதாக சீனா- ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். நாய், குதிரை போன்ற விலங்குகளுக்கு ஏற்படும் பேக்டீரிய பாதிப்பை சரிசெய்ய இந்த chloramphenicol வேதிப்பொருள் பயன்படுத்தப்டுவதாகவும், ஆனால் ஆஸ்திரேலியாவில் இந்த மருந்தை பயன்படுத்துவதில்லை என்றும் ஏசிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் அறிக்கையில், ஆஸ்திரேலிய நிறுவனம் மட்டுமல்லாமல், ஜப்பான், கொரியா, ஐரோப்பிய நாடுகளின் இறைச்சிகளையும் நிங்போ துறைமுகத்திலேயே அதிரடி சோதனைக்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

Traders say millions of dollars have been lost as a result of a ban in China on Australian Country Choice meat...இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய விவசாயத்துறை அமைச்சர் David Littleproud, இப்பிரச்சனையை சரிசெய்ய அனைத்து விதமான நடவடிக்கை செய்ய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். சீனா இது வரை 9 ஆஸ்திரேலிய இறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது. சீனாவின் இந்த தடையால் பல மில்லியன் டாலர் வர்த்தக இழப்பு ஆஸ்திரேலிய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3jn0BLM