ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதனால் உக்ரைன் தூதரகத்தில் பணியாற்றும் ஆஸ்திரேலியா அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டான் டெஹான், இருநாடுகளுக்கு இடையேயான பிரச்னையை உக்ரைன் அரசு அமைதியான முறையில் தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவ்விவகாரத்தில் ரஷ்யாவை தான் நம்ப முடியவில்லை.
ஒருவேளை உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால், ரஷ்யா மீது ஆஸ்திரேலியா கடுமையான பொருளாதார தடையை விதிக்கும். எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தைகளில் அழுத்தம். உள்ளிட்ட நடவடிக்கைகளை ரஷ்யாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா மேற்கொள்ளும் என்று வர்த்தக அமைச்சர் டான் டெஹான் கூறினார்.
Link Source: https://bit.ly/3Jt4zNn