Breaking News

காட்டுத்தீ :வலுவான காற்றை சமாளிக்க, மழை ஒன்றே தீர்வு !

Perth Hills-ல் பேரழிவு தரும் காட்டுத்தீயில் பார்த்து செயல்படுங்கள் என்ற எச்சரிக்கையிலிருந்து, சிறிது அமைதி கிடைக்க மழை பெய்ய வேண்டும். வார இறுதியில் மழை வரும் என்ற நம்பிக்கையினால், தென்மேற்கு நோக்கி வெப்பமண்டல மாற்றத்தால் தீயணைப்பு வீரர்கள் தீப்பிழம்புக்கு மேல்நகர முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

DFES Commissioner Darren Klemm சனிக்கிழமை கூறுகையில், இது ஒரு அற்புதமான விளைவு. இது மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள், குறிப்பாக Tilden Park பகுதிகளில் உள்ளவர்கள், இன்று மாலை 4 மணிக்கு தங்களுடைய இடத்திற்கு செல்ல முடியும் என்றார்.
இந்த தீ விபத்தில் கிட்டத்தட்ட 86 வீடுகள் உள்பட மொத்தம் 11000 எக்டேர் எரிந்து சாம்பலாயின.90 கி.மீ வேகத்தில் வலுவான காற்று வீசக்கூடும் என்ற எச்சரிக்கை இப்பகுதியில் உள்ளது. அனுமதியுடன் மக்கள் பாதிப்பு உள்ள பகுதிக்கு செல்லும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் மரங்கள் மற்றும் கிளைகள் காட்டுத்தீயினால் பலவீனமடைந்து காணப்படும் என்றார்.

Avon Valley தேசிய பூங்கா , Brigadoon, Bullsbrook, Gidgegannup, Upper Swan மற்றும் Walyunga தேசிய பூங்கா போன்ற பகுதிகளில் உள்ளவர்கள், அவசர எச்சரிக்கையிலிருந்து கவனமாக இருங்கள். இன்று பிற்பகல் லேசான மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் நெருப்பு அணையும் அளவிற்கு கனமான மழை வந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது நடக்க போவதில்லை. வீடுகளை இழந்தவர்களுக்கு DFES கண்டிப்பாக மீட்பதற்கு துணை நிற்போம் என்று உறுதியளித்தார்.

To deal with strong winds, rain is the only solution australiaமேலும் அவர் இந்த பகுதியில் வீடுகளை இழந்த உரிமையாளர்கள் இங்கேயே பல காலமாக வாழ்ந்தவர்கள் என்று நான் ஆழமாக கூற முடியும். சில சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டபோதும், Toodyay சாலை சிறிது நேரம் மூடப்படும். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களில் போராடி வருகின்றனர். அதே சமயம் northern flank-ல் ஏற்பட்ட காட்டுத்தீயையும் கையாண்டு கொண்டிருக்கின்றனர்.

Western Power கூறுகையில், சுமார் 465 வீடுகள் மின்சாரம் இல்லாமல் உள்ளன. சேதமடைந்த மின்சார இணைப்பை சரி செய்ய பல வாரங்கள் ஆகும் என்று கூறியுள்ளனர்.