Breaking News

துரித உணவுப் பழக்கத்துக்கு அடிமையாக்கும் டிக்டாக்..!!

வைரலான டிக்டாக் சவால் வீடியோக்களை வைத்து இளம் தலைமுறையினரிடையே துரித உணவுப் பழக்கத்தை, பல்வேறு நிறுவனங்கள் தூண்டி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Tik Tok Addictive to Fast Food Habits

ஆஸ்திரேலியாவில் மொத்தம் 7 மில்லியன் பயனர்கள் டிக்டாக்கில் உள்ளனர். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் இளம் தலைமுறையினர் மற்றும் 16 வயதுக்கு குறைவான பயனர்களாக உள்ளனர். இவர்களில் பலரும் வைரலாகும் சவால் நிறைந்த வீடியோக்களை டிக்டாக்கில் அதிகம் பார்ப்பவர்களாக உள்ளனர்.

இதை பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய வணிக வட்டத்தை விரிவாக்கம் செய்து வருகின்றன. இந்நிலையில் டிக்டாக் வீடியோக்கள் மற்றும் பயனர்களின் பண்புகள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதன்மூலம் உணவுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பல,18 வயதுக்கு குறைவான பயனர்களை குறிவைத்து செயல்படுவது தெரியவந்துள்ளது.

Tik Tok Addictive to Fast Food Habits.அவர்களிடையே துரித உணவுப் பழக்கவழக்கங்களை அதிகரிக்க, சவால் நிறைந்த வீடியோக்களை நிறுவனங்கள் உருவாக்குகின்றன. அதை பிரபலமான சமூகவலைதள பயன்பாட்டாளர்களை வைத்து உருவாக்கி, பல்வேறு தளங்களில் பரவச் செய்கின்றன. இது எதிர்கால சந்ததியினருக்கு கேடாக அமையும் என்று நிபுணர்கள் பலர் எச்சரித்துள்ளனர். உணவுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு டிக்டாக்கில் விளம்பரம் செய்ய எந்தவித கட்டணமும் கிடையாது. எந்தவித முதலீடும் இல்லாமல், அவை லாபம் அடைந்து வருகின்றன. புதுப்புது யுக்திகளை கையாண்டு தங்களுடைய உணவுப் பொருட்களுக்கான சந்தையை அவை விரிவடையச் செய்கின்றன என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டிக்டாக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கொழுப்பு, உப்பு அல்லது சர்க்கரை அதிகமுள்ள உணவுகளுக்கான விளம்பரங்கள் டிக்டாக்கில் இடம்பெறுவது கிடையாது. மேலும், 16 வயது மற்றும் அதற்குக் குறைவான பயனர்களை குறிவைத்து விளம்பரங்கள் எதுவும் தயாரிக்கப்படக்கூடாது என எங்களுடைய நிறுவனம் கொள்கையாக வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் நிதர்சனம் வேறுவிதமாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் பல இளம் தலைமுறையினர் உடல் பருமனால் அவதி அடைந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை 2030-ம் ஆண்டில் 18 மில்லியனாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஐக்கிய ஒன்றியத்தில் துரித உணவுகளை விளம்பரப்படுத்தக் கூடாது என்கிற உத்தரவு நடைமுறையில் உள்ளது. அதே நடவடிக்கை ஆஸ்திரேலியாவிலும் அமல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.