Breaking News

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பள்ளி ஒன்றில் மூன்று பேருக்கு புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு : ACT மாகாணத்திலும் பாதிப்பு பதிவாகும் அச்சம்

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் புதிய வகை வைரஸ் பாதிப்பு பரவ தொடங்கியுள்ள அச்சம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேற்கு சிட்னியில் உள்ள பள்ளி ஒன்றில் முதலில் ஒரு மாணவருக்கு தொற்று உறுதியான நிலையில், மேலும் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது புதிய திரிபு வகை ஒமைக்ரான் என்று சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதேபோன்று ஆஸ்திரேலியாவின் ACT மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து மாகாணத்தில் இரண்டாவது பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ACT மாகாணத்தில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Three people at a school in Sydney, Australia have been infected with a new type of omega-3 virus. fears of an outbreak in the ACT province as well..இதனை அடுத்து அனைத்து மாகாணங்களிலும் தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இரண்டு தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட நபர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மரபணு பரிசோதனையில் ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ACT மாகாணத்தில் வெளிநாட்டுக்கு செல்லாத நபர் ஒருவருக்கும் மைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு சிட்னியில் உள்ள Regents Park Christian பள்ளியில் ஏற்பட்ட தொற்று பாதிப்பு, புதிய தொற்று பரவல் மையமாக மாறும் அபாயம் உள்ளதால் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் Brad Hazzard கூறியுள்ளார்.

Three people at a school in Sydney, Australia have been infected with a new type of omega-3 virus. fears of an outbreak in the ACT province as wellகுறிப்பிட்ட பள்ளியில் முதலில் 2 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 10 மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களின் மரபணு பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதையடுத்து குறிப்பிட்ட Regents Park Christian பள்ளி புதிய தொற்றுப் பரவல் மையமாக உருவெடுத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் அருகில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றதாகவும் அங்கு இருந்தவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நபர் நவம்பர் 28ம் தேதி சிங்கப்பூரிலிருந்து சிட்னியை வந்தடைந்திருந்த நிலையில், இந்த விமானத்தில் வந்த அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவதுடன் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் மூலம் புதிதாக 337 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மாநிலத்திலுள்ள 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 94.6 சதவீதம் பேர் ஆகக்குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையேனும் போட்டுக்கொண்டுள்ள அதேநேரம் 92.6 சதவீதம் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

Link Source: https://bit.ly/3pxr1ge