Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வெளிநாட்டில் இருந்த திரும்பிய ஒரே குடும்பத்தில் 3 பேருக்கும் சக பயணியிடம் இருந்து தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Three members of a family returning from a trip abroad in the state of New South Wales have been confirmed to have been infected by a fellow passenger.

ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளி நாடுகளில் இருந்து வந்த இரு குடும்பத்தினர் சிட்னி டவுன் ஹால் பகுதியில் தனியார் விடுதியில் தனிமை படுத்தப்படிருந்தனர்.

இவர்கள் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு நாடுகளில் இருந்து NSW திரும்பியிருந்தாலும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஏழுபேருக்கு ஒரே வகையான வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

அவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து வைரஸ் தொற்று ஏற்பட்டதா அல்லது தனியார் விடுதியில் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டதா என்ற குழப்பம் நீடித்து வந்தது.

Three members of a family returning from a trip abroad in the state of New South Wales have been confirmed to have been infected by a fellow passenger. 1அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு இன்னொரு குடும்பத்தை சேர்ந்தவர்களிடமிருந்து வைரஸ் தொற்று பரவி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் தனியார் விடுதியில் அருகருகே தங்க வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று நியூ சவுத் வேல்ஸ் மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்

ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 11 ஆம் தேதிக்குள் இவர்களுக்கு வெற்றி பெறவே இருக்கக்கூடும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்தொற்று உள்நாட்டு பரவலில் தற்போது வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்த தனியார் விடுதியில் அவர்களுக்கு உதவிகளை செய்த பணியாளர்களும் தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்று பாதித்த 7 பேரும் தற்போது சிறப்பு மருத்துவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்

Three members of a family returning from a trip abroad in the state of New South Wales have been confirmed to have been infected by a fellow passenger. 2கடந்த ஜனவரி மாதம் வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகள் மூலமாக தனியார் தங்கும் விடுதிகள் பணிபுரிந்த இரண்டு துப்புரவு பணியாளர்களுக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தற்போது 67 பேருக்கு குருநாத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த சனிக்கிழமை 8088 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இதுவரை 1,73,852 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது..