Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் – பீல் மாகாணங்களில் மூன்று நாள் ஊரடங்கு அமல் : தொற்று உயர்வதை தடுக்க நடவடிக்கை

Three days lockdown in Perth-Peel provinces of Western Australia

பெர்த் – பீல் பெருநகரங்களில் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களிடேயே தொற்றுப்பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து வெள்ளியன்று நள்ளிரவு முதல் 3 நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு்ள்ளது. வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. முழு ஊரடங் தேவையை பொறுத்தே அமல்படுத்தப்பட்டுள்ளதாக மேற்கு ஆஸ்திரேலிய ப்ரீமியர் Mark McGowan கூறியுள்ளார்.

இது கடினமான ஒன்று தான் என்றாலும், இது தவிர்க்க முடியாத ஒன்று என்றும் அவர் செய்தியாளர்களிடம் பேசிய Mark McGowan குறிப்பிட்டார்.

Chris Hipkinsமுழு ஊரடங்கு காரணமாக மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையிலான விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய வழித்தடதிறப்பு நெறிமுறைகள பின்பற்றி வருவதாகவும், மாகாண அரசிடம் இருந்து முறையான அறிவிப்பு வரும் வரை போக்குவரத்து சீராக இருக்காது என்றும் கோவிட் 19 – கண்காணிப்பு அமைச்சர் Chris Hipkins கூறியுள்ளார். இதனிடையே விக்டோரியாவில் மேற்கு ஆஸ்திரேலிய பயணிகளோடு தொடர்பில் இருந்த விமான பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அடுத்த மாதம் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கான சர்வதேச வருகையை ஆயிரத்து 25-ல் இருந்து 512 ஆக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க உள்ளதாகவும், பல்வேறு நாடுகளுக்கும் விடுதிகளில் தனிமைப்படுத்துதலில் உள்ள சிக்கலை தெரியப்படுத்தி அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கு ஆஸ்திரேலிய ப்ரீமியர் McGowan தெரிவித்துள்ளார்.

Victorian Health Minister Martin Foleyமேற்கு ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்துதல் முடிந்து விக்டோரியா திரும்பிய நபர் ஒருவக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடனான தொடர்பில் யாரும் இல்லை என்றும் விக்டோரிய சுகாதாரத்துறை அமைச்சர் Martin Foley கூறியுள்ளார். மேலும், உலக பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் Foley நினைவுபடுத்தி உள்ளார். பெர்த் நகரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தலுக்காக தங்கி இருந்தவர்களில் தான் தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாக இருந்ததாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இரண்டு எதிரெதிர் அறைகளில் இருந்த இருவருக்கும் தொற்று உறுதியாக உள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட அந்த விடுதியில் இனி வெளிநாட்டவர தங்க அனுமதி மறுக்கப்படுவதாக மேற்கு ஆஸ்திரேலிய ப்ரீமியர் McGowan தெரிவித்துள்ளார்.

Link Source: https://cutt.ly/Zv4pmys