Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவில் மூன்று நாள் ஊரடங்கு : போர் வீரர்கள் நினைவு நாள் உள்ளிட்ட நிகழ்வுகள் பாதிப்பு

விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தொற்றுப்பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து பெர்த் – பீல் பகுதியில் மூன்று நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

anzac dayAnzac Day – என்று அழைக்கப்படும் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கான நினைவுநாளில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் உள்ளிட்ட 40 சேவைகள் முழு ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டன. திங்களன்று நள்ளிரவு வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஞாயிறன்று பல்வேறு முக்கிய நிகழ்வுகள் ரத்தானது வருத்தமளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் உயிர்நீத்த தினத்தின் 106 வது நினைவு நாள் என்பதால் தெருக்களில் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டு, இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.

போரில் பாதிக்கப்பட்டு தனிமையில் இருக்கும் பலருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்திருப்பதால் அவர்களை மீட்கும் பணிகளில் ஹாகா லைஃப் அமைப்பு செயல்பட்டு வருகிறது. தற்கொலை மட்டுமே தீர்வு என்ற மனநிலையில் ஆழ்ந்த அமைதியில் தள்ளப்பட்டு்ள்ள நபர்களுக்கு நாங்கள் துணை நின்று அவர்களை மீட்டு எடுக்கிறோம் என ஹாகா லைஃப் அமைப்பின் Jamie Schuster கூறியுள்ளார். தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பங்களுக்கும் நாங்கள் துணை நிற்கிறோம் என்றும் கூறி ஆன்லைன் மூலமாக பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

Three-day curfew in Western Australia. Impact of events including War Veterans Memorial Day1915 ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி நடைபெற்ற கல்லிபோலி போரில் உயிர்நீத்த 2000 ஆஸ்திரேலியர்கள் மற்றும் 200 நியூசிலாந்து மக்கள் உயிர் நீத்ததன் நினைவாக Anzac Day எனப்படும் நினைவுநாள் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும். அப்படியான ஏப்ரல் 25 ஞாயிறு இந்த ஆண்டு ஊரடங்கால் முடங்கியதால் பெருமளவு மக்கள் கூடி அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனிடையே, பெர்த் நகரத்தின் ஓட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்ட நபருக்கு தொற்று உறுதியானதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கார்டினியா விடுதி ஒன்றில் தொற்று பாதித்த நபரின் தொடர்ச்சியாக இவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு்ள்ளது. யாரெல்லாம் அந்த விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றார்களோ அவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், தொடர்பில் இருந்த 337 பேர் இதுவரை கண்டறியப்பட்டு்ள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Link Source: https://cutt.ly/Dv4W0oW