Breaking News

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் ஆயிரக்கணக்கான பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதம் : துல்லியமான எண்ணிக்கையில் வைரஸ் பாதிப்புகளை வெளியிடுவதில் சிக்கல் நீடிப்பதாக அதிகாரிகள் தகவல்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் தொடர்ந்து தொற்று பரவ அதிகரித்து வருவதன் காரணமாக ஏராளமான பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பரிசோதனை கருவிகள் மூலமாக சோதனை செய்வது குறித்து பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில் ஏராளமானோர் RTPCR பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 2000 பிசிஇ ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. இதன் காரணமாக துல்லியமான வைரஸ் பாதிப்பு எண்ணிக்கைகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முடிவுகள் தாமதம் காரணமாக இன்னும் ஏராளமானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஞாயிறு அன்று ஒரே நாளில் 44 ஆயிரத்து 255 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் தொற்று பாதித்தவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். இதனிடையே நிலுவையில் உள்ள 7000 மாதிரிகளை ஏழு நாட்கள் கடந்து விட்ட காரணத்தால் பரிசோதனை செய்ய இயலாது என்று மெல்போர்ன் Pathology மையம் தெரிவித்துள்ளதாக கோவிட் 19 கமாண்டர் Jeroen Weimar தெரிவித்துள்ளார்.

இது இது தொடர்பாக சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களிடம் மன்னிப்பு கோரப்பட்டுள்ள நிலையில் அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் பரிசோதனை நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பரிசோதனைக்கு மாதிரிகளை கொடுத்த 7 ஆயிரம் பேரில் தொடர்ந்து யாருக்கேனும் அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட வாரத்தில் மட்டும் 3 லட்சம் பேர் தொடர்ந்து பயணம் மேற் கொண்டதாகவும் அதில் ஏராளமானோர் பரிசோதனைக்கு மாதிரிகளை அளித்திருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விக்டோரியா மாகாணத்தில் ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனை மற்றும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சம அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன் மூலமாக துல்லியமான முடிவுகளை விரைவாக தெரிந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மாகாண அரசு மேற்கொண்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் மையங்களுக்கு நாளொன்றுக்கு 30 ஆயிரம் ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இதன் அடிப்படையில் பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தும் அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Link Source: https://bit.ly/3r27JA9