Breaking News

பதக்கம் வெல்லும் ஒலிம்பிக் வீரர்களுக்கு ஆயிரக்கணக்கில் கிடைக்கும் பரிசுத்தொகை – பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு கிடைப்பதில்லை : வருத்தம் தெரிவிக்கும் முன்னாள் பாராலிம்பிக் வீரர்கள்

Thousands of prizes for medal-winning Olympians - Paralympians not available. Former Paralympian regret

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு 20ஆயிரம் டாலர் வரை பரிசுத்தொகை வழங்கப்படுவதாகவும், ஆனால் பதக்கம் வெல்லும் பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு எந்தவிதமான பரிசுகளும் வழங்கப்படுவது இல்லை என்று முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை குற்றம் சாட்டியுள்ளார்.

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை தங்கம் வென்ற Jodi Willis-Roberts, தனக்கான ஸ்பான்சர்ஷிப் கேட்டு விண்ணப்பத்த போது இரண்டு முறை தான் நிராகரிக்கப்பட்டதாகவும், அதில் ஆச்சர்யம் இல்லையென்றாலும் நிராகரித்தற்கான காரணம் தம்மை அதிர்ச்சிக்கு ஆளாக்கியதாக Jodi Willis-Roberts கூறுகிறார்.

ghjமாற்றுத்திறனாளியான தனக்கு அந்த நிறுவனம் ஸ்பான்சர்ஷிப் அளிக்கும் பட்சத்தில், பொதுமக்களிடையே அது மாற்றுத்திறனாளிகளுக்கான பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் என்று பதிந்துவிடும் என அந்நிறுவனம் கூறியதாக Jodi Willis-Roberts கூறியுள்ளார். இதே போன்று ஏராளமான நிறுவனங்கள் தன்னை நிராகரித்த போது அவை அனைத்தையும் தனக்கான உந்துசக்தியாக தான் எடுத்துக் கொண்டதாகவும், அதன் காரணமாகவே ஆறு பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று 2 தங்கம் 2 வெள்ளி தங்கம் 3 வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை தன்னால் வெல்ல முடிந்தது என்றும் Jodi Willis-Roberts தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று வரும் வீரர்களுக்கு முறையே தங்கப் பதக்கம் வென்றால் 20 ஆயிரம் டாலரும், வெள்ளி பதக்கம் வென்றால் 15 ஆயிரம் டாலரும், வெண்கலம் வென்றால் 10 ஆயிரம் டாலரும் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு கார் தயாரிப்பு நிறுவனங்கள் காரையும் பரிசாக வழங்கி வருகிறது.

olஆனால், பதக்கம் வெல்லும் பாராலிம்பிக் வீரர்களுக்கு இது போன்ற எந்தவிதமான பரிசுத்தொகையும் வழங்கப்படுவதில்லை என்றும் மாறாக சில தொண்டு நிறுவனங்கள் மக்களிடம் வசூலிக்கும் பணத்தை வீரர்களுக்கு பரிசு தொகையாக அதிர்ந்து கொடுக்கிறது என்றும் Jodi Willis-Roberts கூறியுள்ளார். மற்ற வீரர்களைக் காட்டிலும் மிகவும் கடினமாகவும், அதிக உழைப்புடனும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்து வருவதாகவும் ஆனால் அதற்கான உரிய அங்கீகாரத்தை விளையாட்டு கழகங்கள் தங்களுக்கு வழங்குவதற்கு முன் வருவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Link Source: https://ab.co/2Ym3TqN