Breaking News

மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான செவிலியர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் திரண்டு, பாராளுமன்றத்துக்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பி.பி.சி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில், டென்னீஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச், தடுப்பூசி போடாமல் இருப்பதால் முக்கிய போட்டிகளில் பங்குபெற முடியாது என்பதில் தனக்கு கவலை இல்லை. விம்பிள்டன், ஃபிரெஞ்சு ஓப்பன் போன்ற போட்டிகளில் விளையாட முடியாது என்பது பெரியளவில் என்னை பாதிக்காது என்று தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்திற்குள் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவின் எல்லைகள் திறக்கப்படும் என முதல்வர் மார்க் மெக்கவுன் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 5-ம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளை முன்னிறுத்தி வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவின் எல்லைகள் மூடப்பட்டன. முன்னதாக கடந்த ஜனவரி 20-ம் தேதி பேசிய முதவர் மார்க் மெக்கவுன், மாநில மக்கள் அனைவரும் மூன்றாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே எல்லைகள் திறக்கப்படும் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/3HVXFQi