Breaking News

மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறையைப் போக்கவும், ஊதிய உயர்வைப் பெறவும் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து ஆயிரக்கணக்கான செவிலியர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தத்தை துவங்கியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அம்மாநிலத்தில் மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

Thousands of nurses have gone on a 24-hour strike following talks with the government over a shortage of medical staff and a pay rise..அந்நாட்டு விதிகளின் படி நான்கு நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் பணியில் இருக்க வேண்டும். ஆனால் கொரோனாவால் நோயாளிகளின் எண்ணிக்கை நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு மருத்துவமனைகளில் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள் நீண்ட நேரம் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 2.5 சதவீத ஊதிய உயர்வு மற்றும் மேலும் செவிலியர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் செவிலியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Link Source: https://bit.ly/3sLlbJr