Breaking News

ஷாங்காய் நகரில் வசிக்கக்கூடிய 26 மில்லியன் மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பொருட்டு ஆயிரக்கணக்கிலான சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ராணுவத்தினரும் களமிறகப்பட்டுள்ளனர்.

Thousands of health workers and soldiers have been deployed to test the corona for the 26 million people who live in Shanghai.

சீனாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நச்சில் பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக இதுவரையில்லாத வகையில் ஷாங்காய் நகரில் நேற்றைய பாதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து சீன அரசு மிகப்பெரியளவில் கொரோனா பரிசோதனை செய்யும் முடுக்கிவிட்டுள்ளது.

அந்த வகையில் ஷாங்காய் நகர் முழுவதும் வசிக்கக்கூடிய மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஜியாங்சு, ஜெஜியங், பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஷாங்காய்க்கு 10 ஆயிரத்திற்கு அதிகமான சுகாதாரப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளது.

அவர்களுடன் ராணுவத்தினரும் இணைந்து பணியாற்றவுள்ளனர். ஷாங்காயில் தற்போது ஈரடுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது. அனைத்து நகர மக்களும் வீட்டுக்குள் முடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 3-ம் தேதி நிலவரப்படி 9067 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Thousands of health workers and soldiers have been deployed to test the corona for the 26 million people who live in Shanghai..அதில் 8581 பேருக்கு எந்தவிதமான அறிகுறிகளும் இல்லை. ஏற்கனவே சீனாவின் பன்நோக்கு மருத்துவமனைகள், உடற்பயிற்சி கூடங்கள், அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் போன்றவற்றில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளன. ஷாங்காயில் புதியதாக கட்டப்பட்டுள்ள சர்வதேச வர்த்தக மையத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு வேறொரு இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்க அரசு அசுர வேகத்தில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் தெரிவிக்கின்றன.

Link Source: https://bit.ly/3uWgaih